கனடிய வரி முகவர் நிறுவனம் மீது பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக bare trust வரி அறவீட்டு நடைமுறையில் திடீர் மாற்றத்தை அறிவித்துள்ளதாக வரி முகவர் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தேவையின்றி பணத்தை விரயமாக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அபராதம் விதிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் வரியை செலுத்தி முடித்ததன் பின்னர் திடீரென வரிமுறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வரி செலுத்துவதற்கான கால அவகாசம் பூர்த்தியாக நான்கு நாட்கள்...
கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுகாதார திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில வகை மருத்துவ சாதனங்களின் ஊடாக மரணம் நேரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறக்கமின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டோருக்க சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒமினிலெப் அட்வான்ஸ்ட் (OmniLab Advanced) என்ற கருவி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சில வகை மருத்துவ சாதனங்கள் சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் பயன்படுத்தும் சில மருத்துவ சாதனங்களைப்...
கனடாவில் துப்பாக்கி முனையில் அலைபேசியொன்றை இரண்டு பேர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
முகநூல் வழியாக விளம்பரம் செய்யப்பட்ட அலைபேசியொன்றை கொள்வனவு செய்வதற்காக சென்ற நபர்கள் இவ்வாறு அலைபேசியை கொள்ளையிட்டுள்ளனர்.
ஸ்காப்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனமொன்றில் வந்த இரண்டு பேர் அலைபேசியை காண்பிக்குமாறு கோரியதாக, அலைபேசி உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் காரிற்கு சென்றதாகவும் அப்போது அந்த நபரை தடுக்க முயற்சித்த போது துப்பாக்கியைக் காண்பித்து தம்மை குறித்த நபர்கள்...
உரிமைக்கான பாதையை நோக்கி செல்லும் தமிழரசுக்கட்சியை சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக சிதைக்க முற்படுவது கவலையளிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கட்சியின் நிலையில் மனம் பாதித்த நிலையில் நாம் இருக்கின்றோம். சுயநலத்துடன் சேர்ந்த சூழ்ச்சிகரமான சில செயற்பாடுகள் நடைபெறுகின்றது. என்னை நேரடியாக தாக்காவிட்டாலும் வேறு சிலரைக்கொண்டு தாக்க முற்படுகின்றனர்.
வடக்கு, கிழக்கில் வாழும்...
செட்டிக்குளம், வாழவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (06.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம், வாழவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மையில் பயணித்த மோட்டார் சைக்கிளும், பட்டா ரக வாகனமும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் படுகாயமடைந்த 21 வயதுடைய மோட்டர் சைக்கிள் சாரதியான அல்முதீன் மிஹ்ராஜ் என்ற இளைஞர் செட்டிகுளம்...
சந்திரிகா குமாரதுங்க(Chanrika Bandaranayake Kumarathuge) நீதிமன்றம் சென்று என்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார். எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருக்கிறது. இந்த சவால்கள் அனைத்துக்கும் நாங்கள் முகம்கொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
கடுவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சவாலுக்கு நாங்கள் முகம்கொடுப்போம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி...
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று (07.04.2024) காலை வவுனியா(Vavuniya) கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.
செயலாளர் பதவி
இதன்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு புளொட் அமைப்பிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் மூத்த தலைவர் நல்லநாதர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அண்மையில் மரணமடைந்த நிலையில் அவரின் இடத்திற்காக புளொட் அமைப்பை சேர்ந்த நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இன்று (07.04.2024) பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட சோதனை நடவடிக்கை
கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபரிடம் இருந்து 372 கிராம் ஹெரோயின் மற்றும் 1.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள்...
சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில்(Anuradhapura) நேற்று (07.04.2024) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது ,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி, கூட்டணி அமைப்பது சவாலானது அல்ல.
பத்து கூட்டணிகள் அமைந்தாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும்...
மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி பாடசாலையாக அமைப்பதற்காக இராணுவத்தினரால் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி பாடசாலை
அதற்கிணங்க, இப்பயிற்சிப் பாடசாலையை தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி பாடசாலையாக...