அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் இன்றையதினம்(08) வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.
கேகாலையில்(Kegalle) நேற்றையதினம்(07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட தொகை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 10,000 ரூபாவுடன், 08ஆம்(இன்று) திகதி முதல் நிறுவனங்களுக்கு பணம் விடுவிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.நாட்டில் உள்ள 28...
மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க நவடடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
சனசக்தி வறுமை ஒழிப்புத் திட்டத்தை விடவும் காத்திரமான வறுமை ஒழிப்புத் திட்டமொன்று இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் (Kurunagala) ஹிரியாகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆண்டின் இறுதி தீர்மானம்
இந்த திட்டத்தின் ஊடாக வறிய மக்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கு தேவையான உதவிகள்...
அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தைமார்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்கு தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் வைத்தியசாலையில் செயல்படுத்தப்படவுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்திருந்தார்.
பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி
இதற்கமைய குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால்,...
புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும்(Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நீண்ட விடுமுறையின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்...
மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒப்பந்தத்தின் மூலம் நான்கு வயது குழந்தையை வேறு தரப்பினருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏனையவர்களில் குழந்தையை தத்தெடுக்க ஒப்புக்கொண்ட 45 வயதுடைய பெண்ணும், அவரது 19...
அங்கமுவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, சோதனைச் சாவடிக்கு அருகாமையில், உத்தரவை மீறிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அடையாளம்
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 26 வயதுடைய இலங்கை விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (04-05-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் புதிய செம்மணி வீதி ஊடாக கடக்க முற்பட்ட வேளை அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் சைக்கிள் பயணித்த நல்லூரை சேர்ந்த 61 வயதான...
குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் கீழ் 36 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்ட (Jaffna) குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (06.04.2024) அதிகாலை செம்மணி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 18 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர், இன்று அதிகாலை செம்மணி பகுதியில் வானொலி பெட்டியில் வைத்து 3 கிலோகிராம் கஞ்சாவினை கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...
தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை – ரணில் விக்ரமசிங்க
Thinappuyal News -
தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது முதலில் பொதுத் தேர்தலை நடத்துவது நாட்டுக்கு நன்மை பயக்கும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் மாதம் தேர்தல்
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் சமகால அரசியல் நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் அனுபவத்தின்...
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நேற்று(5) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன கோப்புகளில் கட்சியின் நிர்வாக விவகாரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, பல கோப்புகள் உள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு
அத்துடன், கட்சியின் சில முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ள...