மன்னார் முசலி பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை அடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. குறித்த பகுதியில் இன்று இரவு ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கு பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அண்மைய நாட்களில் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த ஒருவரை இன்று பொது மக்கள் மடக்கி பிடித்துள்ள நிலையில், பொது மக்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே துப்பாக்கி...
நீர்கொழும்பு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கோரியுள்ளார். கொழும்பு நிதி நகர் நிர்மானத்தினால் நீர்கொழும்பு மீனவர் சமூகம் எதிர்நோக்கக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தலையீடு செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும்...
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை இவ்வாறு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, இராணுவ வங்கிக் கணக்கு ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபா அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. குருணாகல் மற்றும் கிழக்கு...
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பலர் நவுறு தீவிலும் அங்குள்ள தடுப்பு முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே. இந்தச் சேவைக்காக நவுறு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35.3 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைப்பதாக Amnesty International அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு ஒரு அகதியைக் குடியமர்த்துவதற்கு மாதமொன்றுக்கு மூவாயிரம் டொலர்களையும் புகலிடக்கோரிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு தலா ஆயிரம் டொலர்களையும் நவுறு அரசு கட்டணமாக அறவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது. இப்படியாக அவுஸ்திரேலியாவிடமிருந்து நவுறு அரசுக்கு...
கட்டிடங்களை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு கடல் மணலைப் பயன்படுத்தும் தொழிநுட்பம் தொடர்பாக மேலும் ஆராய்ந்து அரச கட்டிட நிர்மாணத்திற்கு கடல் மணலைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களின் மற்றுமொரு கட்டமாக இந்த நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உக்கிரமடைந்துள்ள சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளமையின் காரணமாக இன்றைய தினமும் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய காலை நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் அரை மணித்தியாலமும் மின்சாரம் தடைப்படவுள்ளது. நுரைச்சேலை மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள இயந்திரத்தை மீளவும் வழமைக்கு கொண்டு வருவதற்காக விரைவான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக மின்சக்தி அமைச்சின் மேம்பாட்டு இயக்குநர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் நுரைச்சோலை மின் உற்பத்தி கட்டமைப்பில் இவ்வாறான...
2020ம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பதே எமது இலக்கு என பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுபவ முதிர்ச்சியுடன் செயற்படுகின்றார். இம்முறை தேர்தலில் மக்கள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான மக்கள் ஆணையை வழங்கவில்லை. இதன் காரணமாகவே இணக்கப்பாட்டுடன் கூடிய தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வழியையே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பின்பற்றுகின்றார் என புரவசி பலய அமைப்பின் உறுப்பினரும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவருமான கெமுனு விஜேரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… முன்னாள் ஜனாதிபதி செயற்பட்ட நிலைக்கு தற்போதைய ஜனாதிபதியும் தள்ளப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய உரை நாட்டை பின்நோக்கி நகர்த்தும் வகையிலானது. அரசியல்...
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் எண்பது வருடங்களுக்கு பின் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) பாடசாலை மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாசிவன்தீவு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் க.தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது. குறித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொருளாதார வளர்ச்சி, வன்முறை ஒழிப்பு, அனைவருக்கும் பொதுவான சட்டவரைமுறை, நிர்வாகம், தேவை அறிந்து உரிய முடிவு எடுக்கும் பொறுப்பு உள்ளிட்ட விடயங்கள்...