பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து பிரான்ஸ் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் மற்றும் அந்த முகாம்கள் முற்றிலுமாக மூடப்படும் என பிரான்ஸ் அமைச்சர் இமானுவேல் கூறியுள்ளார். ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற பல இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த 5700க்கும் மேற்ப்பட்ட மக்கள் பிரான்ஸில் உள்ள Calais Refugee Camp-ல் தங்கியுள்ளனர். வேறு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சேற்றிலும், துயரத்தை அனுபவித்து...
சிலந்திகள் நாம் எதிர்பார்ப்பதை விடவும் பயங்கரமானதாகவும், பல சிறப்பியல்புகளைக் கொண்டதுமான உயிரினம் என புதிய ஆய்வு ஒன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுக்கு காதுகள் காணப்படாத போதிலும் சில மீற்றர்கள் தொலைவில் மனிதர்கள் கதைப்பதை கேட்கும் ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் சிலந்திகளின் கால்களில் காணப்படும் உரோமங்கள் காற்றில் ஏற்படும் அதிர்வை உணரக்கூடியதாக இருக்கின்றது. இதனால் காற்றின் ஊடாக கடத்தப்படும் ஒலியினை அதன் அதிர்வுகளைக் கொண்டு சிலந்திகள் உணருகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும்...
முதுமையில் பறிபோன இளமையை நினைத்து கவலைப்படாதவர்கள் இருக்க முடியாது. அதனால், இளமையை தக்கவைத்துக்கொள்ளும் ஆராய்ச்சியை மருத்துவ விஞ்ஞானிகள் சிந்திக்காமல் இருப்பார்களா? அந்த ஆராய்ச்சியில் பல காலமாக ஈடுபட்டு வந்தவர்கள் இப்போது வெற்றியும் கண்டுள்ளனர். உடலின் முதுமைக்கு காரணம், உடம்பில் உள்ள செல்களின் ஜீன்கள், டி.என்.ஏ. போன்றவை பலவீனமடைவதுதான். அதை எப்படி பாதுகாக்கலாம் என யோசித்த ஆராய்ச்சியாளர்களுக்கு, செல்களில் சக்தி கேந்திரமாக விளங்கும் மைட்டோகாண்ட்ரியாவில் மாற்றங்களை ஏற்படுத்தி முதுமையை கட்டுப்படுத்த முடியும் என...
விமான பயணத்தில் வானிலை முக்கியமானது. பருவமழை, பனிமூட்டம் அதிகமிருந்தால் கூட விமானங்கள் ரத்துசெய்யப்படுவது உண்டு. விபத்துக்குள்ளாகும் விமானங்களுக்கு மோசமான வானிலையையும் காரணமாய் சொல்வது உண்டு. அப்படி இருக்கையில், இடி விழுந்தால் பூமியிலே உயிர்ச்சேதம் ஏற்படும்பொழுது, விபத்து நுட்பம் மிக்க விமனத்தில் விழுந்தால் என்னவாகும்? இது பலருக்கு இன்னும் புலப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்லாந்தில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. ஹால்டோர் ஹுட்மண்ட்ஸன் என்பவர் வானத்தில் அதிசயமாய் நடந்த ஒரு...
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக நாளுக்கு நாள் இலத்திரனியல் சாதனங்களின் அளவு சிறிதாகிக்கொண்டே செல்கின்றது. இதன் பயனாக கணணி சாதனங்களும் சிறிய அளவில் உருவாக்கப்பட்டு அறிமுகமாகிவருகின்றன. தற்போது Vensmile K8 எனும் மினி கணணி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கணணியானது Intel Atom x5-Z8300 Cherry Trail Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 64GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது. இவை தவிர மீள் தன்மை கொண்ட கீபோர்ட்டினையும் இணைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின்...
விண்வெளியில் நிரந்தரமான ஒரு ஆய்வு நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள சீனா, இன்று (அக்டோபர் -17) காலை ’ஷெங்ஸோ- 11’ என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியுள்ளது. இந்த விண்கலம் அவர்களுடைய திட்டத்தை நிறைவேற்ற செலுத்தப்பட்டுள்ள இரண்டாவது விண்கலமாகும். இது, வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து, சென் டாங், ஹெய்பெங் என்ற இரு விஞ்ஞானிகளுடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சுமார் ஒரு மாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள்...
முன்னணி இணையத் தேடல் நிறுவனமான கூகுள் தனது பயனர்களுக்கு செய்திகளை அறிந்துகொள்ளும் வசதியையும் வழங்கிவருகின்றமை அனைவரும் அறிந்ததே. தற்போது இச் சேவையின் ஊடாக நம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்தும் மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்துள்ளது. அதவாது வெளியிடப்படும் செய்திகள் உண்மையானவையா என்பதை ஏனைய இணைய செய்தி சேவைகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் வசதியே அதுவாகும். இதன் ஊடாக கட்டுக்கதைகள் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை பயனர்கள் தவிர்க்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் செய்தி...
7ம் அறிவு உண்மையில் தென்னிந்திய சினிமா வரலாற்றில் சிறந்த ஓர் திரைப்படம். போதிதர்மன் என்ற தமிழனை பற்றிய பல வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தியது. ஆனால் அந்த போதிதர்மன் போன்றே மற்றுமொரு தமிழ்துறவி சீனர்களால் இன்றளவும் வணங்கப்பட்டுவருவது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும். இந்தியாவில் பிறந்த “போகர் சித்தர்” பழனி முருகன் சிலையை உருவாக்கிய பெருமையையும் தன்னகத்தே கொண்டவர். பழனி முருகன் சிலையை உருவாக்கி பின் சைவ சமய கருத்துக்களையும் சில போதனைகளையும் பரப்ப சீனா உட்பட...
கைப்பேசி இன்று மனிதனின் மூன்றாவது கையாக மாறிவிட்டதென்றால் அது மிகையல்ல. அதுவும் ஆப்பிள் ஐபோனானது பல விடயங்களில் நமக்கு பயன்படுகிறது. திடீரென நமக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் ஐபோன் லாக் ஆயிருந்தாலும்,"Medical ID" மூலம் உதவி பெறலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் நமது அவசர மருத்துவ தேவைகளான ரத்த வகைகள், அவசர உதவி நம்பர்கள் போன்றவற்றை அணுக முடியும். இதற்கு முதலில் Health App யை டவுண்லோட் செய்யவும். அதை கிளிக் செய்தால் மெனு...
உலக பொருளாதார அமைப்பு “Global Travel And Tourism" என்ற பெயரில், உலகளவில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. குறித்த நாட்டில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற நாடுகள் நைஜீரியா கொலம்பியா ஏமன் பாகிஸ்தான் வெனிசுலா பாதுகாப்பான நாடுகள் பின்லாந்து கத்தார் ஐக்கிய அரபு நாடுகள் ஐஸ்லாந்து ஆஸ்திரியா