மட்டக்களப்பில் இலக்கத்தகடு அற்ற வாகனம் தொடர்பில் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை உடனடியாக அழைத்து குறித்த விடயம் தொடர்பாக கண்டு பிடித்து உரிய வாகனத்தின் உரிமையாளரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், “மட்டக்களப்பு நகரில் நான்கு மாத காலமாக இலக்கத் தகடு அற்ற வாகனத்தினால் பொது மக்கள் பீதியில்” என்ற செய்தி அண்மையில் ஊடகங்களில்...
மஸ்கெலியா மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் மற்றும் நீர்த்தேக்கத்திற்கு நீர் உள்வாங்கும் பகுதிகளில் குப்பைகள் மற்றும் அசுத்த கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார். மஸ்கெலியா மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனால் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசுத் தன்மை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில்கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும்...
நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திருக்குமார் நடேசனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. நடேசன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரும் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவின் கணவருமாவார். இவருக்கு 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணை ஆகியனவற்றின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பூகொட நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண இந்த பிணையை வழங்கியுள்ளார். மல்வானை பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியொன்று ஆறு...
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மார் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூகியை நேற்றைய தினம் சந்தித்துள்ளார். இந்தியா கோவாவில் இடம் பெற்ற பீரிக்ஸ் மாநாட்டில் வைத்தே ஜனாதிபதி ஆங் சான் சூகியை சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் நேற்று காலை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் வங்காள விரிகுடாவின் பிம்ஸ்டாக் என்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டு என்ற அடிப்படையில் இலங்கையின்...
மலையக தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரும் நியாயமான சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடி வேம்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பு கால்நடை பாலுற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள். 265 தமிழ், முஸ்லிம் பாலுற்பத்தியாளர்கள் இச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள். அங்கு சங்கத்தலைவர் அழகையா முருகன் செயலாளர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா உள்ளிட்டோர் பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முடிவில்...
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த 17 சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக ஹக்மன, மஹியங்கனை, வெல்லவாய, நவகமுவ, கொட்டாவ மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வைத்து ஒரே நேரத்தில் 17 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த வகையில், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 24 திட்டங்களுக்கு 27 இலட்சமும் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 19 திட்டங்களுக்கு 31 இலட்சமும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 18 திட்டங்களுக்கு 20 இலட்சத்து எழுபத்தையாயிரமும் ஒதுக்கியுள்ளார். மேலும், செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 27...
வவுனியாவில் கடன் கொடுக்கும் நுண்நிதி நிறுவனங்களை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(17) காலை இடம்பெற்றுள்ளது. வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் ஒன்று கூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில், கிழமைகளில் பெறப்படும் கடன்களினால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், அதனால் துர்ப்பாக்கிய நிலையில் தாம் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனை அரசாங்கம் மற்றும் வடமாகாணசபை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டியுள்ளனர். அத்தோடு “நுண் நிதிக் கடன்...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்ததாக கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட ஓய்வுபெற்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் புதிய திசை நோக்கி திரும்பியுள்ளது. கேகாலையை சேர்ந்த இவர் கடந்த 14 ஆம் திகதி அதிகாலை தனது வீட்டில் சமையல் அறையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரேமானந்த உதலாகம...
தனது ஆட்சிக்காலத்தில் இருந்த சமய ரீதியான புத்துணர்ச்சி தற்போது குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹர பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும், நல்லிணக்கம் என்பது ஒரு பக்க சார்பாக கட்டியெழுப்ப முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.