இலங்கைக்கு உதவுவதற்கு நாம் தயாராக இருப்பதாக ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர்புட்டின் தெரிவித்துள்ளார். இந்தியா - கோவாவில் இடம் பெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ரஸ்யாவின் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது ரஸ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதேவேளை, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று...
கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையில் உள்ள யோஷித ராஜபக்ஸவுக்கு அவரதுரு பாட்டி வழங்கியதாக கூறப்படும் காணி தொடர்பான வழக்கு கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பிரதான நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யோஷித ராஜபக்ஸவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மிஹிந்து மாவத்தையில் உள்ள காணி தொடர்பான அறிக்கையை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும் காணி அளவீடு தொடர்பான அறிக்கையை காணி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பினது சிறுபான்மையினர் பிரச்சினைகளை ஆராயும் விசேட பிரதிநிதி இஸாக் றீட்டாவுடன் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்பின் தலைவர்கள் திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை(15) சந்தித்தனர். நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ஸ்தாபகர் தர்மலிங்கம் கணேஷ் தலைமையிலேயே மேற்படி சந்திப்பினை மேற்கொண்டு கலந்துரையாடலினை நடத்தினர். இச்சந்திப்பின் போது பல்லாண்டுகளாக மிகவும் நலிந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பெறுவதில் உள்ள நிலைப்பாடுகளை...
பாடசாலை மாணவர்களுடைய சீருடைக்கான பண வவுச்சர்கள் அடுத்த மாதம் 01 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தினை விட இலகுவாக மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய முறையில் இந்த வவுச்சர்களை தயாரித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு புதிய தவணைகள் ஆரம்பமாகும் போது, புதிய சீருடைகளுடன் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் வகையில் குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும்...
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி இன்று(17)காலை மன்னாரில் மக்கள் பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம் பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு மன்னார் நகர பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் சமாதான அமைப்பின் அனுசரனையுடன் இடம்பெற்றுள்ளது. மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் இருந்து ஆரம்பமான பேரணி மன்னார் பஸார் பகுதியூடாக மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்துள்ளது. இதன்...
பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.9 ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளd. எனினும் குறித்த நிலநடுக்கம் தொடர்பில் சேத விபரங்கள் இது வரையில் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையினை வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 1988ஆம் ஆண்டு, 7.0 என்ற ரிச்டர் அளவில் சுனாமி பேரலை ஏற்பட்டது. இதன் போது 2100 பேர்...
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றிற்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது. குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்க...
இந்தோனேசியாவின் பாலியில் இரண்டு தீவுகளை இணைக்கும் தொங்கும் மஞ்சள் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் ஏராளமான தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் பாலித் தீவும் ஒன்று. இந்த தீவில் உள்ள சிறிய தீவுகளான நுசா லெம்போங்கன் மற்றும் நுசா செனிங்கன் தீவை இணைப்பதற்காக மஞ்சள் நிற பாலம் ஜெம்பாடன் கனிங் உள்ளது. இந்த இரண்டு தீவுகளில் உள்ள மக்கள் நடைபயணமாகவும், மோட்டார் சைக்களில் மூலமாகவும் கடந்து செல்வது வழக்கம்....
மேற்கு வங்க மாநிலத்தில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பூடான் நாடு வழியாக அவ்வப்போது சீனாவுக்கு கடத்தப்படுகிறது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை மருந்துகள் தயாரிக்க சீனாவில் பயன்படுத்துகின்றனர். இதனால் பாம்பு விஷத்துக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் நல்ல...
மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது. மியான்மரில் சுரங்க தொழிலாளர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல் ஒன்றை அவர்கள் நிலத்தில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். இதன் எடை சுமார் 175 டன் என கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள பாறையின்...