லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா ஒன்று அதன் இருப்பிடத்தை விட்டு வெளியேறியதால் பதற்றம் நிலவி வருகிறது.
லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா கூண்டு கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டிடங்களுக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளனர்.
Follow
Dr. Jonathan T. Mall @CognitiveTwo
#Gorilla on the loose? Huddling in a building at the #londonzooafter...
70 ஆண்டுகள் தாய்லாந்து மன்னராக நீடித்தவர் என்ற பெருமை பெற்ற பூமிபோல் அதுல்யாதேஜ் இன்று காலமானார் என அரண்மனை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் 234 ஆண்டுகள் மன்னராட்சியில் 9-வது மன்னராக நீடித்தவர். உலகிலேயே அதிக நாட்கள் மன்னராக பதவியில் நீடித்தவர் என்ற பெருமைக்குரியவர் பூமிபோல்.
இவர் கடந்த சில தினங்களாகவே சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பாங்காக்கில் உள்ள சிரிராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
ஆனால்...
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் லூசெர்ன் மாகாணத்தில் உள்ள Allmend என்ற நகரில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் 4 வயது ஆண் குழந்தைக்கு நீச்சல் கற்பிக்க பெற்றோர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பயிற்சி நீச்சல் குளமான அப்பகுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் இல்லாத...
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இன்று இரவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதேனும், அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தல் அதற்கு முகம்கொடுக்கும் நோக்கில் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்று பகல் சேவையில் ஈடுபட்ட அனைத்து பொலிஸாரும் இரவு நேர கடமையில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து ஆச்சரயமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
புலனாய்வுப் பிரிவினர், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மற்றும் லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு ஆகியன அரசியல் நோக்கில் செயற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து...
நீண்ட நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சியான காலநிலை நீடித்து வந்த நிலையில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
மக்களின் அன்றாட தேவைகளுக்கு கூட நீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்று பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாரி கால வேளாண்மைச் செய்கைக்குரிய காலங்கள் தள்ளிப் போகின்றமையல் கிராமங்களில்...
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுண்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடைகளை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு கல்கிஸ்ஸ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லசந்த கொலை தொடர்பிலான வழக்கு நேற்று கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கல்கிஸ்ஸ பிரதான நீதவான் மொஹமட் சஹாப்தீன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தோண்டி எடுக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீளவும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இந்தப் பிரேதப் பரிசோதனைக்காக இறுதியாக லசந்த அணிந்திருந்த ஆடைகளை புலனாய்வுப்...
ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தொடர்புபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் கொழும்பு இரவு நேர கேளிக்கை விடுதி மீதான தாக்குதல் சம்பவ சீ.சீ.ரீ.வி. கமரா காட்சிகள் தெளிவில்லை என மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நள்ளிரவில் தாக்கப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேனவிற்கும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பு உண்டு என குற்றம்...
மட்டக்களப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நகை திருட்டு வழக்கில் எதிரிக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி மா.கணேசராஜா அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 20.08.2014 ம் ஆண்டு மட்டக்களப்பு, பூம்புகார் நகர், 07ம் குறுக்குத்தெரு எனும் விலாசத்திலுள்ள ஜோசம் ரெக்சானாவுக்கு செந்தமான ரூபா 20000/= பெறுமதியான நகை களவாடப்பட்டிருந்தது.
இத்திருட்டு சம்பந்தமாக அதே இடத்தைச் சேர்ந்த தர்மதேவா -ராஜ்குமார் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சில் உரையாற்றிய போது பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாகவும் அவர்...