இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாட்டில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும் திடீரென காற்று வீசி இடி, மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக திணைக்களம் எச்சரித்துள்ளது. இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் மற்றத்தினால் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வீடுகளுக்கு அருகில்...
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறையை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. எதிர்வரும் காலங்களில் புலமைப் பரிசில் பரீட்சையானது உதவு தொகை வழங்குவதற்காக மட்டும் நடத்தும் ஓர் பரீட்சையாக மாற்றியமைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நுகவெல மத்திய மாஹா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சர்களுக்கு இடையில் எதுவித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்தமை தொடர்பில் அதிருப்தி வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி, தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கோத்தபாய இந்த தகவலை வெளியிட்டார். நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி...
ஹற்றன் நகரில் டன்பார் வீதியில் அமைந்துள்ள இரும்பு பொருட்கள் விற்பனை கடை ஒன்றில் நேற்று (13) இரவு சுமார் 10.30மணியளவில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக சேதமடைந்துள்ளதாக ஹற்றன்பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹற்றன் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் ஹற்றன் டிக்கோயா நகர சபையின்தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து இரண்டு மணித்தியால முயற்சியின் பின்னே தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தீயினால் எவருக்கும் பாதிப்படாதா போதிலும் உடனடியாக செயற்ப்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததனால் ஏனைய...
உயர்நிலை இராணுவத்தினரைப் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது. சீஐடி, எப்சீஐடி மற்றும் லஞ்ச ஊழல்கள் எதிர் ஆணைக்குழு ஆகியன அரசியல் நோக்கில்செயற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதியின் குறித்த நிலைப்பாடு, சுயாதீனக்குழுக்களின் செயற்பாட்டுத் தன்மையை அர்ப்பணிப்பை உணர்த்துகிறது என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்ட படையினருக்கு எதிரான...
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நோயாளர்களை தரையில் படுக்க வைத்து பராமரித்து வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் போதிய அளவு கட்டில் வசதியின்மையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நோயினை குணப்படுத்துவதற்காகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றோம். அப்படி இருக்கையில் இடுப்பு வருத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நோயாளர்கள் தரையில் படுத்து மேலும் வருத்தத்தை அதிகரித்துக் கொண்டு...
பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் நிறைவு செய்து, மேலும் மூன்று அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைகளை ஒப்படைப்பதற்கு ஜனாதிபதியிடம் நாளொன்றை பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார். அதற்கான தினத்தை ஜனாதிபதி செயலகம் அறிவித்ததும் உடனடியாக விசாரணை நிறைவு செய்த அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலான விசாரணை அறிக்கையும்...
இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வடபகுதியை புறக்கணித்ததன் காரணத்தினாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அனைத்து மாவட்டங்களையும் சரிசமமாக கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் பாரபட்சம் காட்டியதன் காரணமாகவே சில மாவட்டங்களில் அபிவிருத்திகள்...
நடைமுறை விசாரணைகளின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிசந்தேகம் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான எஸ். பி திஸாநாயக்க இந்தகருத்தை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரான இந்தநடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை என்று அவர்குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், இராஜாங்க அமைச்சர் ஏ எச் எம் பௌசிக்குஎதிராக நீதிமன்ற அழைப்பாணை விடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வாகனங்களை முறைகேடாக...
மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டதீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடிசெய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம்மற்றும் கடும் காயம் விளைவித்தமை, 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியானபொருட்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 6 எதிரிகளுக்குஎதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் எதிரிகளுக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும், 6...