ரெமோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பேசுகையில் இப்படத்தில் நடித்த , முதலில் மக்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் எங்களது நன்றிகளை சொல்லி கொள்கிறேன். இப்படத்தில் பயணித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர், இன்னும் கொஞ்சம் கூட சிறப்பாக செய்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றும். ஆனால், அதைக்கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. ஒரு படம் நடித்து முடித்தபிறகு அந்தப்...
தற்போது மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவராவார். சாதாரணமாக ஒரு நடிகை, ஒரே நடிகருடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்து விட்டாலே அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் புகைந்து விடும். அந்த வகையில், சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், பின்னர் ரெமோ படத்திலும் நடித்துள்ளார். தற்போது அப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கும், கீர்த்தி சுரேஷ்க்கும் காதல் என தகவல்கள்...
ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஆசிரியை ஒருவரை உலகின் மிக அழகான ஆசிரியை என இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஷ்யாவின் மின்ஸ்க் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார் Oksana Neveselaya என்பவர். இவரது புகைப்படங்கள் தான் தற்போது வைராக இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இணைய பயன்பாட்டாளர்கள் இவரை உலகின் மிக அழகான ஆசிரியை என்று கொண்டாடி வருகின்றனர். தன்னை உணர்ச்சி மிகுந்தவர் என...
சூரிய மண்டலத்தில் உள்ள சிறுகோள்களால் பூமிக்கு ஆபத்து ஏற்பட உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பால்வெளி அண்டத்தில் கிரகங்கள் போன்றே, கோள்களும், நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன. இந்த வகையான சிறு கோள்களை ஆராய்வதற்காக பென்னு என்ற சிறுகோளுக்கு விண்கலத்தை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் அண்டங்கள், உயிரினங்கள் தோன்றியது எப்படி என்பதை ஆராய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே சிறுகோள் ஒன்று பூமி மீது மணிக்கு 60,000 கி.மீ., வேகத்தில் மோதினால் அது கடலில்...
விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து கிளம்பும் சமயத்தில் விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒர்லாண்டோ சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து Aer Lingus ரக விமானம் அயர்லாந்தில் உள்ள டுப்ளின் விமான நிலையத்துக்கு கிளம்ப தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் அடி பகுதியில் உபகரணங்கள் வைக்கும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீயானது மளமளவென பரவ தொடங்கியதால், விமானத்தில் உள்ளே இருந்த 193 பயணிகள்...
சீனாவில் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 113 முன்னோர்களின் உடல்கள் களிமண் தொட்டிகளுக்குள் அடக்கம் செய்து பதப்படுத்தப்பட்டுள்ளன. இதை கண்டுபிடித்த சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தங்கள் முன்னோர்களின் செயலை வியந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மட்பாண்டங்களில் வைத்து புதைக்கும் சடங்கு சீனாவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதால் முக்கியத்துவமாக நினைக்கின்றனர். அந்த கல்லறையில் குழந்தைகள் உடல்கள் மட்டுமே இந்த முறையில் புதைக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேர்களுடைய உடல் மட்டுமே பருவ...
உலகின் மிக வயதான பிளம்பர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் கனடாவின் 92 வயது முதியவர். கனடாவை சேர்ந்த லோர்ன் பிக்லி(Lorne Figley) என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார். 92 வயதான போதிலும் பிளம்பர் தொழிலில் மிக உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார். 1947ம் ஆண்டில் தொழிற்பயிற்சி முடித்த இவர், 4 நண்பர்களுடன் இணைந்து Broadway Heating Ltd என்ற நிறுவனத்தை தொடங்கி, பின்னர் நிறுவனத்தின் முதலாளியானார். இந்த வேலையை தான் காதலிப்பதாகவும், தொடர்ந்து வேலை...
அமெரிக்காவின் பிரபல பாடகர்களில் ஒருவரான ஜேனட் ஜாக்சன் 50-வது வயதில் தனது முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். மறைந்த பிரபல பாடகரான மைக்கேல் ஜாக்சனின் தங்கையும் பாடகருமான ஜேனட் ஜாக்சன் இந்த தகவலை பத்திரிகை ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளார். கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜேனட் ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். Unbreakable என்ற தலைப்பில் உலக அளவில் இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள தயாராகி வந்த நிலையில் ஜேனட்...
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தண்டை பெற்று அல்லது சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலையில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் தற்போது வரையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அவர்களில் ஒருவராகவும். காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். துமிந்த சில்வா ஞாபக மறதி மற்றும் நுரையீரல் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். விளக்கமறியலில்...
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியை அண்டியுள்ள 16 பாடசாலைகளை ஒரு மணிநேரம் தாமதமாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக பதுளை வீதியை அண்டியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் நேரத்துக்கு பாடசாலைக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக்...