தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று பேரணி ஒன்று இடம்பெறுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் இந்த பேரணி ஆரம்பமாகியது.
புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்த குறித்த பேரணி, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
...
5000 சிவில் பாதுகாப்புப் படையினரை பொலிஸ் சேவையில் உள்ளீர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிவில் பாதுகாப்புப் படையில் கடமையாற்றி வரும் சுமார் 5000 பேரை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சிவில் பாதுகாப்புப் பிரிவில் சுமார் 40000 பேர் கடமையாற்றி வருகின்றனர்.
போர்க் காலத்தில் இவர்கள் கிராமங்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பின்னர் தற்போதைய அரசாங்கம் இந்த...
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 16/10/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், காலை 9 மணிமுதல் பழைய மாணவர்கள் தங்கள் பதிவு மற்றும் அங்கத்துவத்தை உறுதிப்படுத்தி கொள்வதுடன் அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெறும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட கௌரவ பேராசிரியர் பட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மக்கள் கொள்கை மற்றும் அரசியல் பிரிவின் முன்னாள் பேராசிரியர் லக்சிறி பெர்னாண்டோ கடிதம் மூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தருக்கு இந்த கடிதம் 2015ம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 11ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த மற்றும் கோத்தபாயவுக்கு கௌரவ...
காரப்பிட்டியவில் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்க்கு நிதி திரட்டும் முகமாக பருத்தித்துறையில் ஆரம்பமாகிய நடைபயணம் நேற்று புளியங்குளத்தை வந்தடைந்தது.
இன்று காலை 5.00 மணியளவில் புளியங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி இந்த நடைபயணம் ஆரம்பமாகியுள்ளது.
இதனை புளியங்குளத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த நடைபயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன , வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வங்கி...
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து நூற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட வறட்சி நிலை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சன்னாசிப் பரந்தன், நெடுங்கேணி தெற்கு, மாமடு, நெடுங்கேணி வடக்கு, ஊஞ்சல் கட்டி, கற்குளம், ஒலுமடு,...
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, கூட்டு உடன்படிக்கை நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 730ரூபா என்ற அடிப்படையில் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக பெருந்தோட்டங்களின் உரிமைகள் கொண்டிருக்கும் நிறுவன தலைவர்களுக்கும் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக...
யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று மதியம் கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வர்த்தகர் கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் ஒன்றிக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும் கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை...
கன்னியா பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வெளிவந்த போது இலங்கையில் உள்ள அனைத்து சைவத் தமிழ் மக்களது மனங்களிலும் வேதனைகள் வெளிப்பட்டதை உணர முடிந்தது.
இதற்குரிய காரணமாக முன்வைக்கப்பட்ட பதில்களை சுருக்கமாக கூறுவதானால் பெரும்பான்மையினர் பறித்து விட்டார்கள் என்பதே.
இதனை நாம் விரிவாகவும் தெளிவாகவும் ஆய்வு செய்வோம். தனது தாயாரின் இறுதிக் கிரியைகளைச் செய்வதற்காக மன்னன் இராவணனால் உருவாக்கப்பட்ட ஏழு கிணறுகள் அமைந்த இடம் தான் கன்னியா என்பதுதான் வரலாறு.
இயற்கையாகவே...