பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றுமேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவே ஞானசார தேரருக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிபதிகளான விஜித் கே.மலகொட மற்றும் நீதிபதி பிரீத்தி பத்மன்ஆகியோர் முன்னிலையில் இந்த மனு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
திபேத்திய ஆன்மீகத் தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும் திபேத்திய இனத் தலைவருமான 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன் அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று இன்று சுவிஸர்லாந்திற்கு வருகைதந்துள்ளார். அவருக்கான அரச வரவேற்பு பல்சமய இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணி முதல் புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் அவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பல...
மானிடம் அறக்கட்டளையும், தெல்லிப்பழை தாய்மார் கழக இணையமும் இணைந்து யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை முன்பாக மானிடம் இயற்கை சுவையகத்தை ஆரம்பித்து வைத்துள்ளன. "இயற்கையோடு வாழ்வோம் புற்றுநோயை வெற்றி கொள்வோம்" எனும் மகுடவாசகத்துடன் இந்தச் சுவையகம் இயங்க ஆரம்பித்துள்ளது. நவராத்திரியின் விஜயதசமி தின நன்னாளான நேற்றுச் செவ்வாய்க்கிழமை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். நந்தகுமாரன் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். முற்றிலும் தாய்மார்களை மாத்திரம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவகம் இயற்கையான...
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். வர்த்தகரின் நிதி செயற்பாடுகளில் உதவியாக இருந்த நபரே இந்த கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் ஒன்றரை மாத கால திட்டம் என பிரதி...
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 6 நாள் வேலையும் நாளொன்றிற்கு 1000 ரூபாய் சம்பளத்தையும் வழங்கக்கோரி மகளீர் அபிவிருத்தி நிலையம் கடந்த புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர். இப் போராட்டமானது சத்திரசந்தியில் ஆரம்பித்து யாழ் பேருந்து நிலையத்தை அடைந்து பின்னர் முனியப்பர் வீதியினூடாக வீரசிங்கம் மண்டபத்தினை வந்தடைந்தது. ' தொழிலாளர் சம்பள நிர்ணயத்தை அரசே உன் கையிலெடு' , ' நல்லாட்சி அரசே தொழிலாளர்...
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியிலே 13.10.2016 அதாவது இன்றைய தினம் காலை இவ்விபத்து சம்பவித்துள்ளது. நுவரெலியாவிலிருந்து அட்டன்நோக்கி வந்த கார் எதிரே வந்த முச்சக்கரவண்டிக்கு இடம்கொடுக்க முற்பட்டபோதே மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லாதபோதும் கார் சேதத்திற்குள்ளானதாகவும் விபத்து தொடர்பில் விசாரணை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் 300 அடி பள்ளத்தில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் மரணமானதுடன் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா மாகஸ்தன்ன மரக்கரி தோட்டத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த பட்டா ரக லொறியே 12.10.2016 மாலை 6 மணியளவில் நானுஒயா...
  முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அகில இந்திய பாஜ தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். முதல் வரின் உடல்நிலை குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்தனர். முன்னதாக, மாநில பாஜ தலைவர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 22ம்தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல்...
  நாட்டை பிளவுபடுத்துவதற்கோ, அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மாற்றுவதற்கோ தான் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் ஜனாதிபதியானது நாட்டைப் பிளவுபடுத்த அல்ல என்று தெரிவித்துள்ள  அவர், பாதுகாப்பு தரப்பினரை பாதிக்கும் விடயங்களை செய்ய யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மனசாட்சியுடன் மக்களுக்காக நிறைவேற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  
இலங்கை முஸ்லிம்கள் தெற்காசியாவின் சிறு பான்மை முஸ்லிம் சமூகங்களில்   மிக நீண்ட வரலாற்றுத் தொன்மை கொண்டவர்கள். சுமாராக ஆயிரம் வருட கால பூர்வீகம் அவர்களுக்குள்ளது. அரேபியர் களின் வழித் தோன்றல்கள் எனக் கருதப்படும் இலங்கை முஸ்லிம்கள் 13ம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்திய முஸ்லிம்களுடன் தமது சமூக, கலாசார, சமய உறவுகளைப் பேணத் தொடங்கினர். இதே வேளை 18ம் நூற்றாண்டுக்குப் பின்னர் மலாக்கா, ஜாவா தீவுகளைச் சேர்ந்த மலா...