அப்பிள் நிறுவனமானது Mac Book Air எனும் மடிக்கணணியை அறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே. இக் கணணியானது பாரம் குறைந்ததாகவும், மிக மெலிதான வடிவமைப்பினைக் கொண்டிருந்தமையாலும் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது. எனினும் அதிக விலை காரணமாக இக் கணணியை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு HP நிறுவனம் Mac Book Air கணணியை ஒத்த புதிய கணணி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. HP ENVY எனும் இக்...
கிழக்கு மாகாணத்தில் 150 சுற்றுலா விடுதிகளை அமைக்க இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்தின் எஸ் டீ பி அமைப்பின் காணி மனித உரிமை செயற்பாட்டாளர் வூவி தெரிவித்துள்ளார். இன்று திருகோணமலை குச்சவெளி வாலையுற்று பிரதேசத்தில் சுற்றுலா துறை மூலம் சாதாரண மக்களது உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பாக நடந்த செயலமர்வில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது திருமலையில் நடக்கின்ற நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள், சிறுவர்கள் துஸ்பிரயோகம் அதிகமாக நடக்கின்ற பிரதேசமாக இன்று திருமலை மாறிவருகின்றது....
மலையகத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைரய நிறைவேற்றக் கோரியும் அவர்களது தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது குறித்த கவனயீர்ப்பு ஊர்வலம் பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் ஏ9 வீதி வழியாக வந்து பிரதான பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. பின்னர் அங்கிருந்து வவுனியா பசார் வீதி...
வட்டக்கச்சி இராமநாதபுரம் விவசாயிகள் உர மானியம் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நடைமுறைப்பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று இராமநாதபுரம் கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட விவசாயிகள், தாங்கள் இந்த கால போகத்திற்குரிய உர மானியம் பெறுவதில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். குறிப்பாக உர மானிய படிவத்தை நிரப்பி கையொப்பத்திற்கு கிராமசேவையாளரிடம் செல்லும்போது விவசாயக்காணியின் மூல ஆவணங்களை தருமாறு பணிக்கிறார். நாங்கள்...
யாழ்.மாவட்ட கடற்பரப்பில் பெருமளவு உற்பத்தியாகும் கடல் உணவுகளை ஆய்வுகள் என்ற ரீதியில் இனங்கண்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வளங்களை கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த வளங்களை கொள்ளையடித்து தமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் முயற்சிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களில் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது. கடல்வளங்களை சுரண்டிச் செல்ல முற்படும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஆய்வுகளுக்கு யாழ்.பல்கலைக்கழகமும் முறைமுகமான பங்களிப்பினை வழங்குவதாக சம்மேளனம் கூட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில்...
கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்டுள்ளதுடன் விடுதியின் சொத்துக்கள் மற்றும் பாதுகாவலர் கடுமையாக தாக்கப்பட்டனர். அண்மையில், இந்த விடுதி தாக்குதலில் சில ஊடகங்களில் ஜனாதிபதியின் மகன் தாஹாம் தொடர்புபட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே விசாரணைகளை விரைவில் முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரிடம் ஜனாதிபதி தெரிவித்தார் என நாடாளுமன்ற ஊடக...
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அரசியல் ரீதியான காரணங்களுக்காக கோரினால் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரனவிதாரண தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “முதலமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல் உண்டு, அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என அண்மைக்காலமாக பலரும் கேட்கின்றனர். உண்மையிலேயே அவருக்கு பாதுகாப்பு...
இலங்கை போக்குவரத்து துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட நிதி உதவியாக ஒரு மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக மேல் மாகாணம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இந்த மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கமைய கண்காணிப்பு நடவடிக்கைகள்...
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வுகளை 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டமும் பேரணியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டோர் “ தமிழ் மொழிமூல நுண்கலை பட்டதாரிகளை புறக்கணித்தது ஏன்?, மத்திய அரசே மாகாண அரசே பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனம் வழங்கு, பட்டதாரிகள் தொடர்ந்தும் வீதியிலா?”...
மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரமித் ரம்புக்வெல்ல கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அவரை கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்தனர். இந்த வழக்கில் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் 29 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளது. ரமித்...