அரச சார்பற்ற நிறுவனங்களின் போலி அறிக்கைகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்புப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு போலி அறிக்கைகளை அனுப்பி வைத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படுவதனால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு அதிகளவில் விஜயம் செய்கின்றனர் என...
குடிநீர் இன்றியும் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வெலிக்கந்தையில் வாழும் 36 சிங்கள குடும்பங்கள் பாரிய சிரமமக்களுக்கு முகம்கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த குடிநீர் மற்றும் யானை பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அதிகாலை 3.00 மணியளவில் வந்த யானை வீட்டை உடைத்து சேதப்படுத்தியதுடன், இருவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார் .
இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்...
கள்ளக் காதலியின் 79 வயதான தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை வெலிஓய கொலனி ரம்பாவெ பகுதியில் வசித்து வந்த 79 வயதான மூதாட்டி ஒருவரே பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் சுமார் 50 வயது மதிக்கத் தக்க...
அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது மனித உரிமை கேந்திர நிலையம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுச் செயற்பாட்டாளரான அர்ஜூன் என்பவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி தப்பிச் சென்றதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
பொலிஸார்...
படுகொலை செய்யப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் விவகார வழக்கினை ஜூரிகள் சபை முன்னிலையிலா அல்லது தனி நீதிபதி முன்னிலையிலா விசாரணை செய்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நேற்று எழுத்துமூல வாதங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
ரவிராஜ் படுகொலை விவகார வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி...
வளி மண்டலத்தில் மழை பெய்யக்கூடிய மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய அளவிற்கான மழை பெய்யும் சாத்தியங்கள் இதுவரையில் வளிமண்டலத்தில் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
வரட்சியுடன் கூடிய காநிலை மாத இறுதியில் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை ஆய்வாளர் சாமில் பிரேமதிலக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எல்லை நிர்ணய குழு அறிக்கை தயாரித்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் திருத்தச் சட்டம் தொடர்பில் இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து பதிவு செய்யப்பட்ட அரசியல்...
தாம் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டமையானது, நாட்டை துண்டாடுவதற்காக அல்ல.ஒற்றுமைப்படுத்துவதற்காகவே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.
நாட்டின் பிரதான இரண்டு எதிர் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள தேசியஅரசாங்கத்தை சிலர் விமர்சிக்கின்றனர்.
இந்த அரசாங்கம் நாட்டைப் பிளவுப்படுத்துவதாகவும், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குநாட்டை காட்டிக் கொடுப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
பௌத்த மதத்தை அழித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
எனினும் அவையாவும் சுயலாபத்துக்காக கூறப்படும் கருத்துக்களாகும் என்றும் மைத்திரிபாலசிறிசேன...
இளைய தளபதி விஜய் என்றாலே அமைதியானவர் என்று தான் சொல்வார்கள். ஆனால், அவருடன் நடிப்பவர்களுக்கு தான் தெரியும், விஜய் எத்தனை ஜாலியான மனிதர் என்று.
சமீபத்தில் பைரவா படப்பிடிப்பில் நடந்த ஒரு விஷயத்தை சதீஷ் ஒரு நிகழ்ச்சியில் தொலைப்பேசி வாயிலாக கூறுகையில் ‘இந்த படத்தில் தற்போது நடனக்காட்சி எடுத்து வருகிறார்கள்.
நான் ரிகர்சல் செய்வதை விஜய் சார் பார்த்துக்கொண்டே இருந்தார், அருகில் வந்து ”என்ன பண்றீங்க” என கேட்டார், நான் “ரிகர்சல்...
சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்திசுரேஷ் நடித்த ரெமோ திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சக்ஸஸ் மீட் நடந்தது.
இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நிறைய பேர் கலந்து கொண்டனர். இப்படத்தில் நடித்த கே.எஸ் ரவிக்குமார் மேடையில் பேசிய போது சிவகார்த்திகேயனை பற்றி நான் சொல்லத்தேவையில்லை.
வெகு சீக்கிரமாக சினிமாவில் வளர்ந்து வெற்றி பெற்றவர். இதற்கு அவரது உழைப்பு & சின்சியாரிட்டி தான் காரணம் என்றார்.
எனக்கும் வயதாகவில்லை. நான் இன்னும் சிலப்படங்களில் பிரதர்...