அஜித் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர் தற்போது தல-57 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஐரோப்பியா படப்பிடிப்பு முடிந்து வீட்டில் சில நாட்கள் இருந்த அஜித், தற்போது அடுத்துக்கட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் அஜித் தன் வீட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தது அனைவரும் அறிந்ததே. வீடு மட்டும் கட்டிக்கொடுத்ததோடு நிற்கவில்லை, அவர்களை தினமும் வேலையில் வந்து விடுவதற்கும், அழைத்து செல்வதற்கும் வண்டி வைத்து கொடுத்துள்ளாராம். இதுமட்டுமின்றி அந்த பகுதியில்...
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் றெக்க படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. றெக்க தற்போது வந்த தகவலின்படி 4 நாளில் ரூ 8.4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் ஓரளவிற்கு திருப்திகரமான வசூல் கிடைத்துள்ளதாக தெரிகின்றது. மேலும், இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் றெக்க பெரும் வெற்றியை தராது என்றாலும் நஷ்டத்தை கொடுக்காது என தெரிகின்றது.
ரெமோ படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் ரிலிஸாகி வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் பெரும் புரட்சியே செய்துள்ளது. ரெமோ மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 21 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இதுமட்டுமின்றி மலேசியாவில் பிரமாண்ட வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. எப்படியும் 3 நாள் முடிவில் ரெமோ உலகம் முழுவதும் ரூ 30 கோடி வசூலை எட்டியிருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும்,...
இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங். அவருடன் ஒரு காட்சியலாவது வந்து செல்ல வேண்டும் என்று காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் நண்பன் படத்தில் நடிக்க சிம்புவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை அவர் மறுத்துவிட்டார். தற்போது பேஸ்புக் கலந்துரையாடலில் விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள் என்று சிம்புவிடம் கேட்டனர், அதற்கு அவர் ‘கண்டிப்பாக நடிப்பேன். ஆனால், அதற்கான நல்ல கதையும், நேரமும் அமைந்தால் தான் முடியும்’ என கூறியுள்ளார்.
இந்திய அணிக்கான நம்பர் 1 கேடயத்தை விராட் கோஹ்லிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணியிடம் இருந்த நம்பர் 1 இடத்தை இந்திய அணி பறித்தது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் ICC வெளியிடவில்லை. இதற்கான அறிவிப்பை ICC தற்போது...
உலகிலேயே முதன் முதலாக பயோனிக் ஒலிம்பிக் போட்டிகள் சுவிட்சர்லாந்து நாட்டில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Cybathlon என அழைக்கப்படும் இந்த ஒலிம்பிக் போட்டியில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள் உடல் உறுப்புகள் போன்ற செயற்கை மின்சாதனங்களை பொருத்தி இந்த விளையாட்டில் பங்கேற்பார்கள். சுவிஸில் உள்ள சூரிச் நகரில் எதிர்வரும் சனிக்கிழமை அன்று தொடங்க உள்ள இந்த பயோனிக் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 65 குழுக்கள் பங்கேற்று தங்க...
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கோஹ்லி அபாரமாக ஆடி 2வது முறையாக இரட்டை சதம் விளாசினார். இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 557 ஓட்டங்கள் எடுத்தது. இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தில் மைதானத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. கோஹ்லி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்க கோஹ்லியை போன்ற ஒருவர் வெளியே சுற்றிக் கொண்டிருந்தார். அந்த...
இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது போட்டி முடிந்தும் ரகளையில் ஈடுபட்ட இங்கிலாந்து மற்றும் வங்கதேச வீரர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வென்றது. இத்தொடரின் இரண்டாவது போட்டியின் போது இங்கிலாந்து வீரர் பட்லர் டிஆர்எஸ் முறையில் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் வங்கதேச வீரர்களோ இங்கிலாந்து வீரர்...
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவிற்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது கடாபி மைதானத்திற்கு அணி வீரர்கள் சென்று கொண்டிருந்த வேளையில் ஆயுதம் ஏந்திய 10 பேர் கொண்ட தீவிரவாத குழு தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தின் போது 6 வீரர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்....
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாக்கர், தான் பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கமும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர். அதேபோல் ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாக்கர் 4வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும் அவரின் விடா முயற்சியை ரசிகர்கள்...