பிரித்தானியாவில் ஏரியில் மூழ்கிய காரில் இருந்து முதியவர் ஒருவரின் உயிரை 3 பேர் தைரியமாக காப்பற்றியுள்ளனர். Hertfordshire மாகாணத்தில் வயதான முதியவர் ஒருவர் கார் ஓட்டி வந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஏரி ஒன்றில் அவரது கார் பாய்ந்துள்ளது. இதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில், தனது 2 குழந்தைகளுடன் அங்கிருந்த 34 வயது Hannah என்ற பெண் மட்டும் உதவி கேட்டு கத்தியுள்ளார். பின்னர் ஏரியை நோக்கி சென்று அந்த...
கொலம்பிய ஜனாதிபதி மனுவெல் சாண்டோஸ், தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுப் படைகளுக்கும் - இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 52 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்தது. இதில் 2.60 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், 60 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்நாட்டு அகதிகளாக உள்ளனர். இதை முடிவுக்கு கொண்டு வர கிளர்ச்சியாளர்களுடன் கொலம்பிய...
சிரியாவில் விமான தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமி ஒன்று மருத்துவமனையில் தனது தந்தையை கேட்டு அழுத காட்சி உலக அளவில் வைரலாகியுள்ளது. சிரியாவில் போராட்டக் குழுக்களை சிதறடிக்கும் நோக்கில் அந்த நாட்டு விமானப்படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி மக்கள் சிக்குண்டு பலியாவதாக பல்வேறு சம்பவங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திங்களன்று அதிகாலையில் சிரியா விமானப்படை Talbiseh பகுதியில்...
அண்மைக்காலமாக வடமாகாணசபையில் ஊழல் மோசடி விவகாரங்கள் பெருவாரியாக தலைதூக்கியுள்ளதாக முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. இதில் முக்கிய புள்ளிகளான சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நன்னீர் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இந்த மூவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சராமாரியாக சுமத்தப்பட்டுள்ளது. உண்மையில் இந்த அமைச்சர்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டார்களா? 'வேலியே பயிரை மேயும்' ஒரு கதையாக இந்த வடமாகாணசபையினுடைய செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் இருந்து...
தைவானில் காப்பக பொறுப்பாளர் ஒருவர் தனது பொறுப்பில் உள்ள வயதான பெண்மணி ஒருவரை தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அந்த பொறுப்பாளர் வயதான பெண் மணி ஒருவரை தலையில் சரமாரியாக அடிக்கிறார். பயந்து போன அவர் தள்ளாடிய படியே கட்டில் கம்பியை பிடித்தவாறு மெதுவாக நகர்ந்து செல்கிறார். எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், அவர் அந்த வயதான பெண்ணை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதம் கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு தேவைக்கும் அதிகமான தகுதி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றில் போட்டியிடுவதற்கு தான் இன்னமும் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார். எனினும் எதிர்வரும் காலங்களில் எந்தவொரு முறையிலும் நாட்டில் சேவை செய்வதற்கு தான் ஆயத்தம்...
நவராத்திரி விழாவினை சிறப்பிக்கும் வகையில் நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களிலும் இன்று காலை நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நவராத்தி விழா மட்டக்களப்பில் சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் உள்ள பாலர் பாடசாலை பணியகத்தில் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பில் உள்ள பாலர் பாடசாலை...
வவுனியாவில் பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவளித்தும் அக்கோரிக்கையை பெருந்தோட்ட கம்பனிகளை ஏற்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. குறித்த போராட்டம் எதிர்வரும் 13.10.2016 அன்று இடம்பெறவுள்ளது. போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு தனது பூரண ஆதரவினை வழங்குவதாக இதன் செயலாளர் சு.டொன்பொஸ்கோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த...
கடந்த 1998ம் ஆண்டு 2 இளைஞர்களை கைது செய்து காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 11 இராணுவத்தினரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 1998ம் ஆண்டு அச்சுவேலிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த 16 இராணுவத்தினர் அப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் காணாமல் போய்விட்டதாக ஆதாரங்களுடன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு...
திருகோணமலை மூதூரில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். திருகோணமலையில் எஸ்டிஎப் படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே இந்த ஐந்துபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனினும் இவர்கள் யார் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 கிலோ சீ4 மற்றும் ரீஎன்ரீ ஆகியவெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த வெடிப்பொருட்கள்கைப்பற்றப்பட்டுள்ளன.