கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை இலங்கைக்குநடைமுறைப்படுத்த இந்தியா தயராகியுள்ளதாக அந் நாட்டு மின்சாரத் துறை அமைச்சு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய நாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கையின் உள்ளூர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பலாந்தோட்டை, மல்பெத்தால மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன், அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை, பாதசாரி கடவைக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட மாணவன் மீது, பாடசாலை இருக்கும் திசை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகனத்தை செலுத்திய சாரதியை உடனடியாக கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. கடல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் “சமுத்ரா பெரேதார்” என்றகப்பலே இலங்கைக்கு வந்துள்ளது. இந்தக் கப்பல் நேற்றும் இன்றும் முறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும். கொழும்பில் தரித்திருக்கும் இரண்டு நாட்களிலும் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்குசொந்தமான இந்த கப்பலின் அதிகாரிகள், இலங்கையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுடன்பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.
இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களின் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின் குடிவரவுத்துறை செயலகம் இதனை தெரிவித்துள்ளதாக சுவிஸ்ன்போ.கொம் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் மேம்பட்டு வருகிறது இலங்கையில் ஒன்றுக் கூடுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோருகின்ற விடுதலைப்புலிகளுக்கு இடம்தரமுடியாது. அத்துடன் அவர்களுடன் தொடர்புகளை...
தாய்லாந்து நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். பாங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, கடந்த 7ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாலினி பொன்சேகாவிற்கு அவசர இருதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அண்மையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலினி பொன்சேகா குணமடைய வேண்டுமெனக் கோரி நாளை மாலை 6.00 மணிக்கு பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் போதி பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, கலைஞர்கள் மற்றும் ரசிகர்களினால் இந்த பூஜை...
சமகாலத்தில் அரசியல் ரீதியாக தான் அடைந்துள்ள தோல்விகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடராக செயற்பட்ட சுமனதாஸ அபேகுணவர்தனவின் ஆலோசனையால் அவர் பதவி இழந்ததாக பலரினால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்த மஹிந்தவை விட்டு விலகி இருந்த ஜோதிடர், மஹிந்தவுக்கு மீண்டும்...
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உயர்வு நிலை பதிவாகியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைச்சாலை புள்ளி விபரத் தகவல்களின் மூலம் இந்த விடயம் தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… 2010ம் ஆண்டில் 96 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 2015ம் ஆண்டில்...
ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஐப் பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று மிக விமரிசையாக இடம்பெற்றது. கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளுக்கும் வசந்த மண்டபத்தில் எழுந்தருருளியுள்ள வேங்கடேசப்பெருமாள்,சீதேவி,பூதேவி ஆகிய தெய்வங்களுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மேள,தாள வாத்தியங்கள் முழங்க, உரிய மந்திரங்கள் ஓத, குடை, கொடி, ஆலவட்டம் என்பன புடை...
அம்பாந்தோட்டை மாவட்டம், அகுனுகொலபெலச-முரவெலிஹேன இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பல கொலைக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில்ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்படாத சிலரால்தந்தையும் மகனும் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.