கால்பந்தாட்ட நாயகன் ரொனால்டோ தன்னுடைய செல்ல மகனுக்காக பந்துகளை எடுத்துப் போடும் பணியை செய்துள்ளார்.
போர்த்துக்கல் நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இவருடைய மகன் கிறிஸ்டியானோ ஜீனியர்.
இவருக்கும் கால்பந்தாட்டத்தின் மீது தீராத காதலாம், இவரை ஊக்கப்படுத்தும் விதமாக கால்பந்தாட்டம் பற்றி கற்றுக் கொடுக்கிறாராம் ரொனால்டோ.
இந்நிலையில் ஸ்பெயினில் சிறுவர்களுக்காக நடந்த போட்டியில், போஜீலோஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கி விளையாடியுள்ளார் கிறிஸ்டியானோ ஜீனியர்.
அப்போது மகனுக்கு களத்தில் இருந்து வெளியே வரும் பந்துகளை...
இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இங்கிலாந்து வீர பட்லர் மற்றும் வங்கதேச வீரர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கதேசத்தில் சுற்றுபயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி அந்நாட்டில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மிர்புரில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் வங்கதேச அணி 34 ஓட்டங்கள்...
காலி- கராப்பிட்டிய பகுதியில் புற்று நோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் நிதி சேகரிக்கும் நடைபயணம் கடந்த 5ம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபவனியில் முன்னால் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெவர்தன கலந்து கொண்டுள்ளார்.
ஐந்தாம் நாளான இன்று (10) காலை கிளிநொச்சி ஐயக்கச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் ஏ-9 வீதியூடாக இயக்கச்சி,...
முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பலசூரிய மற்றும் முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதி விசாரண ஆணைக்குழுவில்முன்னிலையாகியுள்ளனர்.
இவர்கள் இருவரிடமும் தற்போது வாக்குமூலம் வழங்கப்பட்டு வருவதாகஆணைக்குழுவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆட்சி காலத்தில் ஆயுத பாதுகாப்பு உரிமை இல்லாத போதிலும் தேசிய சுதந்திரமுன்னணி கட்சியில் உள்ள நால்வருக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்புவழங்கியமை தொடர்பிலேயே வாக்குமூலம் அளிப்பதற்காக மஹிந்த பலசூரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த மாதம் 10...
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் மொராயா ஆகர பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (10) காலை 8...
திருகோணமலை - புத்தளம் வீதியில் 77 மைல் கல் பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் பஸ் ஒன்று பயணி ஒருவரை இறக்கி விட்டு முன்னோக்கி சென்ற போது, அதில் இருந்து இறங்கிய நபர் பஸ்சில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
மொரனேவ பிரதேசத்தை சேர்ந்த 76 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து ஹொரவபொத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...
இலங்கை இராணுவம் இன்று(10) தனது 67வது நிறைவு தினத்தை கொண்டாடுகின்றது.
இந்த நிகழ்வுகள் பனாகொட இராணுவ முகாமில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த த சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது.
67வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று கண்டி தலதா மாலிகையில் விசேட மத வழிபாடுகள் இடம் பெற்றுள்ளதுடன் பனாகொட ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் விஷேட பிரித் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.
அத்தோடு இந்து மத வழிபாடுகள் கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலம் வானேஸ்வரர் கோவிலிலும்,...
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதல்வர் விக்னேஸ்வரன்,
வடமாகாணத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள், மீள்குடியேற்றங்கள், சுகாதார,...
வவுனியா- நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்குள் அதிபருக்கான விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு ஒரு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பழைய மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் முன்பாக இன்று காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் பாடசாலைக்கென ஒதுக்கப்பட்ட...
இனவாதத்தினை தவிர்த்துக்கொண்டு ஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில் எடுப்போம், இதன் மூலம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே தேசம் என்பதன் அடிப்படையில் வாழ முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சந்தாங்கேணி ஐக்கிய சதுக்க விளையாட்டு மைதான அபிவிருத்தியின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு நேற்று சகல வசதிகளுடனும் கூடிய விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் எச்.எம்.கரீஸ்...