ஆதாரமற்ற முறைபாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசாரணை பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க வழங்கிய கிரிஸ் ஒப்பந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தான் ஒருவாரம் கைது செய்யப்பட்டிருந்ததாக...
சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக இருவர் வசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) என்ற தம்பதியரே குகையில் 54 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். திருமணமான மூன்றாவது ஆண்டில் இந்த குகைக்கு வந்து சேர்ந்தனர் இந்த தம்பதி.
ஏன் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்று கேட்டதற்கு, ”வறுமை எங்களுக்கு வீடு இல்லை, வாடகை கொடுக்கவும் வழியில்லாமல் இந்தக்...
ஆகக்குறைந்த கல்வி மட்டத்திலிருந்து மீட்டெடுக்க அனைவரும் உறுதி பூணவேண்டும் – மட்டு.அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
Thinappuyal -
மட்டக்களப்பு மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், வெறுமனே சான்றிதழ்களுக்கான கற்கையாகவே இலங்கையின் கல்வியானது அமைந்திருப்பதாக அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாகாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மாற்றத்தினை ஏற்படுத்திக்கொள்ளும் போதே உலக மயமாக்கலில் உள்வாங்கப்படுவோம் என்ற கருத்து வேகமாகப் பரவிவருகிறது.
சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகக் கல்வியாக இருந்தாலும் நான்...
நல்லூர் பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றம்!
Thinappuyal News -
நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொதுமக்கள் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவை சேனாதிராஜாவை சமரரியாக கேள்வி கேட்கத்தொடங்கினர்.
ஆரம்பம் முதல் செய்தியாளர் கைத்தொலைபேசியில் வீடியோ ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த வேளையில், ஒருங்கிணைப்பு குழுவை மக்கள் கேள்விகேட்டது ஊடகங்களில் வெளிவந்து விடும் எனாபதால்...
மலையக இளைஞர், யுவதிகள் மத்தியில் தலைமைத்துவ பண்புகள் மேம்படுத்தப்படவேண்டும் – சோ.ஸ்ரீதரன்
Thinappuyal -
தமது சமூகத்தை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கு அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இளைஞர், யுவதிகள் தத்தமது தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோஸ்ரீதரன் தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் அட்டன் சீடா வள நிலையத்தில் இடம்பெற்ற மலையகத் தலைவர்கள் மற்றும் மலையக இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வில்...
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை – சேதவத்த எனும் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, இஸ்லாமிய...
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரின் லண்டன் பயணமே இந்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
வடக்கு மாகாண சபைக்கு அறிவிக்காமல் – அதன் அனுமதி பெறாமல் யாழ்ப்பாண மாநகரசபைக்கும் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் நகர சபைக்கும் இடையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைச்சாத்திடவுள்ளார்.
யாழ்ப்பாண மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் கலைக்கப்பட்டு தற்போது மாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழேயே இயங்கி வருகிறது....
‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. அவருடைய நினைவுத் தினம் (09/10/2016).
அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு...
பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலையிலிருந்து டயகம நோக்கிச்சென்ற தனியார் பஸ் வாலமலை எல்பட பகுதியிலே 10.10.2016 அதாவது இன்றைய தினம் காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரினால் மண்மேட்டில் மோதுண்டே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 7 பேர் சிறு காயமுற்ற நிலையில் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன்...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
முதல் 3 போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அபாட் பந்துவீச்சில் திணறியது. இதனால் அந்த அணி 36.4 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 167...