தமிழன் விட்டுச்சென்ற எவ்வளவோ வரலாற்று பதிவுகள் இன்று விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது.
அதே வகையில் அவன் வேற்றுகிரகவாசிகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்ககூடும் என்பதில் ஆச்சரியமில்லை.
தமிழரின் சங்க காலத்தமிழ் நூல் தொகுப்புகளில் புறநானூறு எனும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒர் சங்கத் தமிழ் நூலாகும்.
இதில் ஒரு பாடல் பின்வருமாறு அமையப்பெறுகின்றது.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான வூர்தி எய்துப
பொருள்: புலவர்கள் பாடும் புகழ்...
அமெரிக்காவில் குழந்தை கவனிப்பாளர் பெண், 4 வயது குழந்தை மீது உட்கார்ந்து அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லூக்கா பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வீடியோவில் தோன்றும் குறித்த பெண் குழந்தையின் கவனிப்பாளர் என கூறப்படுகிறது.
குழந்தை உடலில் மாற்றத்தை கண்ட தாய் Tiffany, வீட்டில் கண்காணிப்பு கமெரா ஒன்றை பொருத்தியுள்ளார்.
குறித்த கண்காணிப்பு கமெராவில் பதிவான வீடியோவில், கடந்த யூன் மாதம் முதல் குழந்தையின் கவனிப்பாளராக...
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் படம் எடுத்து வெளிப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு செய்வதால் ஏனைய மாணவர்களுக்கு உளத் தாக்கம் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுக் கல்வியமைச்சால் சுற்று நிரூபமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க. பொ. த சாதாரணதரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள் பெற்றுக் கொள்ளாதவர்கள் கூட உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாய்ப்புக்களுண்டு.
எனவே, கல்வியமைச்சின் சுற்று...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் சட்ட விரோதமாக மண் ஏற்றிசென்ற வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!
Thinappuyal -
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமலும் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையிலும் மண் ஏற்றி சென்ற வாகனங்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று காலை மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இன்றி வெல்லாவெளி பகுதியில் இருந்து மண் ஏற்றிவந்த ட்ரக்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பட்டிருப்பு பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இந்த ட்ரக்டரை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று நேற்று அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையில் மண் கொண்டுசென்ற...
உலக மக்களை கண் கலங்க வைத்த மற்றுமொரு புகைப்படம் – கடலில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை
Thinappuyal -
ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிகளவான மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.
இவ்வாறு ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்ளும் போது அது அவர்களின் வாழ்வின் இறுதி முடிவாக கூட அமைந்து விடுகின்றது.
இந்நிலையில், ஆபத்தான கடல் பயணங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அகதிகளின் வருகையினை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.
இவ்வாறான நிலையில், அளவுக்கு அதிகமான...
ஆபாச திரைப்பட தயாரிப்பில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபாச காட்சிகள் உள்ளடங்கிய திரைப்படமொன்றை தயாரிப்பதற்கு பங்களிப்புச் செய்த தொலைக்காட்சி நாடக இயக்குனர், நடிகர், துணை நடிகர் மற்றும் நடிகை ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஆபாச காட்சிகள் அடங்கிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கப் பங்களிப்பு வழங்கியதாக குறித்த நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த அத்தனகல்ல நீதவான் தினேஸ் லக்மால்...
மேலைத்தேயவர்கள் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு என்பவற்றில் தீராத பற்றுக் கொண்டவர்கள்.
அதனால் அவர்கள் நமது கலாசாரத்தில் அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர். நமது உடை, நடை, பாவனை என எல்லாவற்றையும் தங்களது மனதில் பதித்து வைத்துள்ளனர்.
அந்த வகையில், யாழ்ப்பாணம், கைதடியில் பழமை மாறாத வகையில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
மாறுபட்ட கலாசார மேகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்கார மாப்பிள்ளை யாழ். தமிழ்ப் பெண்...
யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினருக்கான விசேட பூஜை நிகழ்வு, மட்டக்களப்பு விகாரையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெறவுள்ளது.
இந்த விசேட பூஜை நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு நகருக்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உரை, பிற்பகல் 02 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும், இது தொடர்பாக மட்டக்களப்பு நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அரிது அரிது மானிடராய் பிறந்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறந்தலிரிது என்ற ஒளவையின் வாக்கினிற்கேற்ப ஆறறிவுள்ள மனிதர்களாய் பிறந்து வாழும் நாம் நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல காரியங்களை செய்திடல் வேண்டும்.
பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையை நல்ல படியாக வாழ வேண்டும். நாம் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் நம்முடைய பெயர் புகழ் நிலைத்திருக்கும் படி வாழ்ந்தால் நம்முடைய பிறந்த நாளை...