ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தாய்லாந்தின் பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு நேற்று மாலை பாங்கொக் நகரில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை அனைத்து துறைகளிலும் வலுவூட்டி புதிய பிரவேசத்திற்குள் கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷா (Prayut Chan-o-Cha ) கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்து...
  பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் ஷரீப்  ராணுவ அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உரி தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள...
தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுக ளில் முப்பது வருடகால ஆயுதப்போராட்டமும் ஒன்றாகும். தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்த ஆயுதக்குழுக்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, தேசி யம் என்ற கோட்பாட்டின் அடிப்படையின் கீழ் அரசுக்கெதிராக போராட்டங்களை நடத்தினர். இவ்வாயுதப்போராட்டங்களை வலுவூட்டும் வகையில் இந்திய அரசானது ஆயுதப் பயிற்சிகள் தொடக்கம் மருத்துவ, பொருளாதார ரீதியில் இவர்களுக்கான உதவிகளை வழங்கியது. தனது பிராந்திய நலனில் அக்கறைகொண்ட இந்தியரசு இலங்கை...
  தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு வாரங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில்; உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவரை இன்னமும் நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை. ஒரு மாநில முதல்வர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பரும் கூட. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி...
    (18 + வீடியோ ) மாத்தறை ரயில் நிலையம் அருகே 21 வயது வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனது சகோதரரின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கேக் வாங்க சென்றுள்ள வாலிபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றமேற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்கள் கடந்துவிட்டன. ‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போயஸ் கார்டனில் இருந்து காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ...
  முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி (வியா ழக்கிழமை) இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற் பட்டது. இதனால் அவர் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு அப் பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இதனால் அன்று இரவே காய்ச்சல் குணப்படுத்தப் பட்டது. ஆனாலும் சளி தொந்தரவு நீர்சத்து குறை பாடு இருந்ததால் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டனர். இந்த...
  இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிக்கொப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள். இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர். இதனையடுத்து ஸ்ரீலங்காவிற்கான இந்திய...