ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பார்வை இழந்த மாணவனான சாரத பவித் ராஜபக்ஷ 181 புள்ளிகளைப் பெற்றுள்ளார். கண்டி கல்வி வலயத்திலுள்ள டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவரை தமது காரியாலயத்திற்கு அழைத்த மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்கா, மாணவனைப் பாராட்டி பணப்பரிசிலும் வழங்கி வைத்துள்ளார்.        
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர்...
ஊடகங்கள் தவறான வதந்திகளை மக்களிடையே பரப்புவதனை நிறுத்திக்கொள்ளவேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் இருவர், உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோர் கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் முறைகேடாக பயணம் செய்ததாக குற்றச்சாட்டுகள் பல ஊடகங்களில் அண்மையில் பரவிவந்தது. குறித்த விடயம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைக் கூறினார். மேலும் நாட்டில் ஊடகங்கள் உண்மைத்தன்மை...
மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூலாவடி 8ஆம் குறுக்கைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி சக்திவேல் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அறியமுடிகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.      
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேலஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் யாழ் பருத்தித்துறையில் நிதிசேகரிப்பதற்காக நடைபவனி ஒன்றைமேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில்,குறித்த நடைபவனி இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவை அவரது தீவிர ரசிகை ஒருவர்மிகவும் இறுக்கமாக கட்டித் தழுவி தனதுஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மஹேலவிற்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா? என இந்த விடயம் அனைவரையும் வியப்பில்ஆழ்த்தியுள்ளது. காலி, கராப்பிட்டிய...
  பிரபுதேவாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் படவுலகில் பரபரப்பு தகவல் பரவி உள்ளது. தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரபுதேவா தமிழ் மற்றும் இந்தி படங்களை டைரக்டு செய்து வந்தார். இருவரும் தமிழ், இந்தியில் தயாரான ‘தேவி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் பிரபுதேவாவின் நடனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தமன்னா பேசி வந்தார். தமன்னாவும் திறமையாக நடனம் ஆடுகிறார் என்று பிரபுதேவா...
  தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.   வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதித்தார். இதையடுத்து பர்ப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. இந்நிலையில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை...
  கடந்த 01.10.2016 அன்று மாரடைப்பு காரணமாக உயிரழந்த வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனிஜெகநாதனின் உடலம் இன்று (06.10.2016) வியாழக்கிழமை மு.ப 11.00 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் பொது மக்களின் அஞ்சலிக்காக கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில்(முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னால்) வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாணசபை அவைத்தலைவர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை...
  இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையைக் கைவிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2010 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்பு என்று சொல்லி வந்த தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணி ஒரு வாரத்திற்கு முன்னர் அதனைக் கைவிட்டு விட்டார்கள். எழுக தமிழ்! பிரகடனம் 'இ' இவ்வாறாகச் சொல்லுகின்றது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், அதன் வழி தமிழ்த்...
  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக இன்று பாடசாலை அதிபர் திரு த. அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கம் , அபிவிருத்தி குழு இணைந்து இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தனர். 
ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு சகல ஆசிரியர்களிர்கும் ஒரே மாதிரியான உடைகள் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்டு ஆசிரியர்களுக்கான விஷேட போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்த பெற்று அவர்களிற்கான...