இந்தியாவின் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள பிரதான பாதை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரையிலும் , கொழும்பு ஊடாக மன்னாரில் இருந்து குருநாகல் வரையிலும், திருகோணமலை ஊடாக மன்னாரில் இருந்து வவுனியா வரையிலுமான பாதை அமைப்பது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபை ஒன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பாலானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ள அரசியல் அமைப்பில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வருடத்தில் பதவிக்காலம் முடியும் மாகாண சபை ஒன்றின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரிடம் அது குறித்து அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற அபிவிருத்தி திட்டம், அதன் அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதியிடம் அந்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியனால் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் 2017 முதல் 2019 வரையான 3 ஆண்டு திட்டமானது நேற்று பகல்(04) கொழும்பிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்ற பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலில் 50530.79 மில்லியனுக்கான திட்டங்கள் உள்ளடக்க பட்டுள்ளதாகவும்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கமும் இதுவரை நிரந்தர தீர்வை வழங்கவில்லை.- சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்
Thinappuyal -
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கமும் இதுவரை நிரந்தர தீர்வை வழங்கவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீள்குடியேற்றப்பட்டவர்களின் பிரச்சினை, விதவைப் பெண்களது குடும்பங்களின் பிரச்சினை மற்றும் நிரந்த வருமானம் இல்லா காரணத்தினால் வடபகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
வடக்கில் கிராமங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கப்படாத...
வட மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குழு இன்றிலிருந்து (06) தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
அமைச்சர்கள் மீதான ஏதும் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை தபால் மூலம் அல்லது நேரிலும் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண அமைச்சர்கள் மீது பல்வேறு முறைப்பாடுகள் தனக்கு கிடைத்தவண்ணம் உள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையான...
இன்று இரவு அமெரிக்காவை புயல் தாக்கும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள 2½ லட்சம் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரிபீயன் கடல் பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. மாத்யூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று ஹெய்தி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை தாக்கியது.
கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த புயல் மிக மோசமாக இருந்தது. 230 கிலோமீட்டர் வேகத்தில்...
கார், பஸ், விமானம் போன்றவற்றில் பயணிக்கும் சிலருக்கு குமட்டல், தலைவலி போன்ற பிரச்னை ஏற்படுவது இயற்கை. இவ்வாறு, பயணிக்கும்போது சிலருக்கு ஏற்படும் குமட்டல், தலைவலி போன்ற உணர்வை 'மோஷன் சிக்னெஸ்' என்று குறிப்பிடுகின்றனர்.
நகர்வின் போது ஏற்படும் மாற்றங்களை நம்முடைய உணர்வு உறுப்புகள் ஏற்றுக்கொள்ள இயலாமல் இவ்வாறான உடல் சுகவீனத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்னை ஏற்படும்போது, சிலர் பயணத்தை ரத்து செய்துவிடும் அளவுக்கு கொண்டுசென்றுவிடும். இதுபோன்று, பயணத்தின்போது ஏற்படும் குமட்டல் மற்றும்...
ஆர்ப்பாட்டம் வேண்டாம், 730 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லுங்கள் – அமைப்பாளர் பெ.பிரதீபன்
Thinappuyal -
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். 06.10.2016 அதாவது இன்றைய தினம் அட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 05.10.2016 அன்று தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, முதலாளிமார் சம்மேளனம், கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவர்களுக்கிடையில் நடைபெற்ற சம்பள பேச்சுவார்த்தையில் 620 ரூபாவாக இருந்த அடிப்படை சம்பளம் 730 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை என்னிடமே கூறியிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஆனால் ஜனவரி எட்டு புரட்சிக்குப் பின்னர் எமது அரசாங்கத்தில் அவ்வாறு தொலைபேசி பதிவு செய்யப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதிபதி...
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மேம்பாடு என்பவற்றை கிரமமாக வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காதெரிவித்துள்ளது.
கொழும்பில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற 11ஆவது தென்னாசிய பிராந்திய நீதிபதிகள்,வழக்குதொடுநர்கள், மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி பாசறையில் பங்கேற்ற அமெரிக்க தூதரகத்தின் பிரதி முதன்மை அதிகாரி ரொபட் ஹில்டன் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு...