வடக்கு கிழக்கை இணையவிடாமல் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பை உருவாக்கும் மஹிந்த ராஜபக்ஸ!
Thinappuyal -0
வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், கூட்டு எதிர்க்கட்சி தற்போது உருவாக்க இருக்கும் புதிய படையணிக்கு ஆதரவினை வழங்கும் வகையில் முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை விரைவில் உருவாக்க உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ...
மட்டக்களப்பு உப்போடை பகுதியில் ஏழு அடி நீளமான முதலையுடன் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!
Thinappuyal -
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போனவரின் சடலம் இன்று (06) காலை கல்லடி பாலம் அருகில் கரையொதுங்கியுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மீன்பிடிக்கச்சென்ற சின்ன உப்போடை,வாவிக்கரை வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.அழகேந்திரராஜா (62வயது) வீடு திரும்பாத நிலையில் அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடும்பஸ்த்தரின் சடலம் இன்று காலை கல்லடி பாலம் அருகில் உள்ள லேடிமெனிங் வீதியில் உள்ள...
வடமராட்சி கிழக்கு, குடத்தனை விளாங்காட்டுப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர முட்கம்பி வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் இன்னொருவர் படுகாயமடைந்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
பருத்தித்துறை - மருதங்கேணி வீதி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அம்பன்,...
வடக்கில் சிங்களவரின் நிலைதான் கொழும்பில் உள்ள தமிழருக்கும் கடும் எச்சரிக்கை!-இசுறு தேவப்பிரிய
Thinappuyal -
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கில் இருந்து சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தாமும் இவ்வாறு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தை விட மேல் மாகாணத்தில் தான் அதிகமான தமிழ் மக்கள் இருக்கின்றனர், எனவே வடக்கில்...
மட்டக்களப்பு-களுமுந்தன்வெளியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Thinappuyal -
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுமுந்தன்வெளியில் இன்று (06) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களுமுந்தன் வெளியில் தனது வீட்டுக்கு முன்பாக பூ பறித்துக்கொண்டிருந்த பெண் மீது மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
களுமுந்தன்வெளியை...
அரச புலனாய்வு ஊடகவியலாளர்கள் குறித்து தமிழ் அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் எச்சரிக்கை!
Thinappuyal -
ஊடகம் என்ற போர்வையிலும், தமிழ் அரசியல் வாதிகளுடைய அரசியல் நடவடிக்கைகளை சீர்குழைக்கும் வகையிலும், கட்சிக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலும் என்றுமில்லாதவாறு இராணுவப் புனாய்வு, என்ஐபி, சிஐடி, சிசிடி, இன்னும் நகரப் புலனாய்வு, கிராமப் புலனாய்வு என்று பகுதி பகுதியாக அரசதரப்பினரால் பிரித்து குறிப்பாக தமிழ்ப் பிரதேசத்தில் இவர்களுடைய செயற்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு நிகழ்வு தொடர்பாக அரசாங்கத்திற்கோ, அல்லது அரச அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குவது தவறில்லை. யுத்தம் முடிந்து 2009ம்...
21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் கடமையாற்றி வரும் 21 சிரேஸ்ட கேணல்கள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திலக் உபயவர்தன, வசந்த மதொலா, எச்.எல்.குருகே, எம்.ஆர்.அபேசிங்க, சாந்த குமார ஈஸ்வரன், நிசாந்த ஹேரத், உபாலி ராஜபக்ச, சுஜீவ செனரத்யாபா, சஞ்சய வனசிங்க, அசோக பீரிஸ், பிரியந்த கமகே, சுமித் பிரேமலால், ரொனால்ட் பொகொடவத்த, சிசிர பிலபிட்டிய, சமந்த...
ஜனாதிபதி என்பது ஒரு நபருக்கு ஜனநாயக அரசியலை அருகில் கொண்டு வரக்கூடிய மிகவும் கௌரவமான ஒரு பதவியாகும்.
உலகின் சில நாடுகளில் ஜனாதிபதி பதவி அந்த நாட்டு குடிமகன்களுக்காக வழங்கப்படும் நிறைவேற்று அதிகாரம் அற்ற பதவி என்ற போதிலும் இலங்கையில் அது முழுமையான அதிகாரம் கொண்ட ஒரு பதவியாகும்.
ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு அதில் இருந்து விலகிய பின்னர் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் தேர்தலில் போட்டியிடுவது, அரசியல் கட்சிகளில் பதவி பெறுவது...
தமிழர்கள் மீதான இராணுவ அத்துமீறல் தொடர்வதால் உயிருக்கு பயந்து இலங்கை திரும்ப தமிழகத்தில் உள்ள முகாம் அகதிகள் தயங்குகின்றனர் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் போது ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
உயிருக்கு பயந்த தமிழர்கள் பலர் குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி தமிழகம் உள்பட இந்தியாவிற்குட்பட்ட பல மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
இவர்களுக்காக தமிழகத்தில் 114 முகாம்கள்...
தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, பொலிஸ் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்று, விக்னேஸ்வரனுக்கு பொலிஸ் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கோரும்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தாம் கோரியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...