மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 03 குடும்பங்களுக்கு, அவர்களது தேவை கருதி வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்முகமாக வலைகள் அடங்கலான ஒவ்வொன்றும் சுமார் 20,000 ரூபாய் பெறுமதியான உள்ளீடுகளை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டிற்க்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து, வடக்கு மீன்பிடி அமைச்சினூடாக கொள்வனவு செய்யப்பட்டது. அப்பொருட்களை வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின்...
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, வட்டுப்பித்தான் மடு முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்திற்கு, அவர்களது தேவையின் அடிப்படையில் குழாய்க்கிணறு அடிப்பதற்காக நிதி ஒதுக்கி  திட்டம்  நிறைவுற்றுள்ள நிலையில் அதற்கான காசோலையை 04-10-2016 செவ்வாய்க்கிழமை மதியம் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கோவில் நிர்வாகசபை தலைவரிடம்  வழங்கிவைக்கப்பட்டது, குறித்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் பின்னால் அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு புலனாய்வாளர்களை ஈடுபடுத்தி தகவல்கள் சேரிக்கப்படுவதனால் விசேட பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கூட்டு எதிர்கட்சியினை அனைத்து தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி கூட்டங்களில் புகைப்படம் எடுப்பவர்கள் மற்றும் வீடியோ செய்யும் சந்தேகமான நபர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் இரகசிய கலந்துரையாடல்களின் போது அந்த பகுதிகளில் நடமாடும் சந்தேகத்திற்கிடமான...
2016 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம், இரண்டாம் இடத்தினை அட்டன் கல்வி வலயம், மஸ்கெலிய சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர். 186 புள்ளிகளைப் பெற்று தேவராஜ் லதூஷிக்கை முதலாம் இடத்தினையும், வீரரவி சதுர்சன் 185 புள்ளிகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் தமிழ் மொழியில் முதலாம், இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
இலங்கை - இந்திய பிரதமர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று புதுடெல்லி சென்றடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இதன்போது இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள்...
யாழ்.நகருக்குள் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்துள்ளனர். மேற்படி சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் யாழ்.வைத்தியசாலைவீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் தகவல்தருகையில், இன்றைய தினம் அதிகாலை 2 மணியள வில் 4 வரையான மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியைதீயிட்டு கொழுத்தினர். பின் மோ ட்டார் சைக்கிளையும் கொளுத்தி விட்டு, வீட்டுகதவு,...
சுவிட்சர்லாந்தில் சுமார் ஐம்பதினாயிரம் தமிழர்கள் அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஆகக்கூடிய அளவில் இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ள சுவிட்சர்லாந்து ஆகும். அங்கு அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்ட வெளிநாட்டவர் எண்ணிக்கை அடிப்படையில் தமிழர்கள் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சுவிட்சர்லாந்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெரும் வர்த்தகர்களாக இருக்கின்றனர். எனினும் அங்கு இதுவரை விடுதலைப் புலிகள்...
அமெ­ரிக்­காவில் நிரந்தர வதி­விட உரிமை (கிறீன் கார்ட்) வழங்­கு­வ­தற்கு 50,000 பேரை தெரி­வு ­செய்­வ­தற்கு இன்று முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரி­வு­ செய்து நிரந்­தர வதி­விட உரிமை வழங்கி வரு­கி­றது. அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் இதற்­காக வரு­டாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெற்று வருகின்றதுடன், Diversity Visa Program எனும்...
ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத நிலை இருக்கும். இந்த ஆரோக்கியத்தைப் பெற பலவிதமான மருத்துவ முறைகளைப் பின்பற்றுகிறோம். சைனஸ் இப்பொழுது அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கும் நோயாக உள்ளது. சைனஸ் தொந்தரவில் பலவகை உள்ளது. அந்நோய் மூக்கை மட்டும் தாக்குவதில்லை. தலையில் உள்ள அனைத்து உறுப்புகளையுமே பாதிக்கிறது. சைனஸ் பிரச்னையில் மூக்கிற்கு அருகே உள்ள காற்றறையான சைனஸ் என்ற இடைவெளியில் நீர் கோர்த்து சளியாக மாறி அடைப்பதால் வருகிறது. சைனஸ் பிரச்னையை...
  யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்- கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு சமஸ்டி மட்டுமே சாத்தியமான ஒரேயொரு தீர்வு என தாங்கள் நம்புவதற்கான காரணம் என்ன? பதில்: சமஸ்டி முறைமை என்பது பலம் வாய்ந்த தேசிய அரசாங்கத்திற்கும் சிறிய உள்ளுர் அரசாங்கங்களுக்கும் இடையில்...