அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசத் துடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறை பாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையால் காய்ச்சல் குணமானது. அவர் வழக்கமான உணவு களை சாப்பிடுவதாகவும், ஓரிரு நாட்கள்...
இரணியன் வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது.   அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திரப் போராட்டம் இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய வித்தியாசம் உண்டு.    இந்தியாவிற்கு சுதந்திரம் பெறுவதற்காக, மகாத்மா காந்தி 30 ஆண்டுகளுக்கு மேலாக அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களை நடத்தினார். வேறு வழி இல்லாமல், சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முடிவு...
உள்ளாடையில் முதல்வர் படம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது ( படங்கள் ) உள்ளாடையில் முதல்வர் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளி யிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை போலீசார் கைது செய்து ள்ளனர். உள்ளாடையில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளியிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சரவணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்த கவர்ச்சி...
  முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவம் உண்மையான தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பின்னரே அவருக்கு நுரையீரல் தொற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தமிழகம் வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சைக்கான ஆலோசனைகளை அப்பல்லோ மருத்துவர்களுக்கு வழங்கினார். அதன் பேரில் தற்போது...
வவுனியா பொருளாதார மத்திய மையத்தில் முக்கோண நரிகளின் தந்திர விளையாட்டு! கைநழுவிப் போனதற்கு உடந்தையானவர்கள் சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சத்தியலிங்கம் என்பவர்களே! என்று மக்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு கூறுவதன் உண்மைத் தன்மை என்ன? தமிழ் மக்களின் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் வவுனியாவில் ஒரு பொருளாதார மத்தி மையம் அமையப்பெறவிருந்தது. இந்தப் பொருளாதார மத்திய மையத்திற்கு ஆதரவாக ஒரு சில அரசியல் வாதிகளும், எதிர்ப்பாக மற்றும் சில அரசியல் வாதிகளும் செயற்பட்டு...
முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்கள் தனிப்பட்ட அவருக்கு மட்டுமானதன்று. அவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. ‘எழுகதமிழ்’ எழுச்சிப்பேரணியினால் தென்னிலங்கை அரசியல் சமூகம் கலக்கமடைந்திருப்பதாகவும், அதனாலேயே ஆட்சியாளர்களும், சிங்களபௌத்த மேலாதிக்கவாதிகளும் இனவாதக் கருத்துக்களைப் பரப்பிவருவதாகவும் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான...
ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள பெரியகுளம் கிராம சேவகர் பிரிவில் கடந்த ஒருவார காலமாக காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து விவசாயச் செய்கைகளை தொடர்ச்சியாக அழித்து வந்த யானைகள் மக்கள் குடிமனைக்குள் புகுந்து இரவு வேளைகளில் காட்டு யானைகள் வீடுகளை உடைத்து வீட்டுக்குள் இருந்த நெல், சாப்பாட்டுப் பொருட்களைச் சாப்பிட்டும், சேதப்படுத்தியும் வருகின்றது. மக்கள் கிராமசேவையாளருக்கு முறையிட்டு அதனை கிராமசேவையாளர் நேரில் பார்வையிட்டுள்ளார். மக்கள் இந்த அழிவுகளுக்கான நஷ்ட ஈட்டினையும், பாதுகாப்பு வேலிகளையும்...
விவசாயிகளுக்கு வாக்களிக்கப்பட்ட எந்தவொரு தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அதிகாரிகள் தவறி விட்டதனால் வவுணதீப் பிரதேச பெரும்போகக் கூட்டம் விவசாயிகளை ஏமாற்றத்தில் தள்ளிவிட்டிருப்பதாக உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச பெரும்போக நெற்செய்கைக்கான கூட்டம்(03) நேற்று வவுணதீவு பிரதேச செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் பிரசன்னத்துடன் இடம்பெற்றது. மாகாண சபை உறுப்பினரான கே. துரைரெட்ணம் மாத்திரம் இந்தக்...
ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வைக் கோரியை தொழிலாளர் போராட்டம் 9ஆவது நாளாகவும் மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணிப் பகுதிகளில் 04.10.2016 அதாவது இன்றையதினமும் நடைபெற்றது. முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கருகில் கருப்புக்கொடிகளை ஏந்தியவாரு மஸ்கெலியா பிரதேசத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவின் நோட்டன் மஸ்கெலியா வீPதியில் லக்ஷபான சந்தியிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் லக்கம் அப்புகஸ்தன போன்ற 8 தோட்டங்களைச்...
அண்மையில் இலங்கை கிரிக்கெட் வீரரான திலகரத்ன தில்ஷான் பாடல்களை இயற்றிஇணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதேபோல் சசித்திரவும் தனது இரண்டாவது பாடலை பதிவேற்றம் செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சசித்திர சேனநாயக்க தனதுஇரண்டாவது பாடலை இயற்றியுள்ளார். குறித்த பாடலானது முகப்புத்தகத்திலும் இணையத்தளங்களிலும் தற்போது வைரலாக பரவி வருகின்றது. தனது இரண்டாவது பாடலுக்கு ‘Ruhiru Bindu Kiri Rasata Harawa’ என பெயரிட்டுள்ளார். இந்த பாடலானது அம்மாக்களின் அன்பை வெளிகாட்டுவது போல் இயற்றப்பட்டுள்ளது. சசித்திர சேனநாயக்க...