முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் மல்வானை காணி தொடர்பில் உரிமை கூற முடியாதென்றால், அதன் விற்பனை பணத்தை வழக்கிற்கு எடுக்குமாறு அரசாங்கத்தின் சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே கூறியிருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மல்வானை கஹபட வீதியில் 16 ஏக்கர் காணி ஒன்றை கொள்வனவு செய்து வீடு ஒன்று நிர்மாணித்து அரசாங்க...
கடந்த 2008ஆம் ஆண்டு ஆரையம்பதி பிரதேசத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு மீதான இரு முக்கிய எதிரிகளுக்குரிய சுருக்க முறையற்ற விசாரணை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் நடைபெற்று முடிவடைந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் முகத் தோற்றளவில் குறித்த குற்றம் தொடர்பான தீர்ப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை நேற்றைய தினம் நடைபெற்ற முகத் தோற்றளவிலான விசாரணை நிறைவடைந்த நிலையில் அதற்கான விசாரணையை எதிர்கால விசாரணையின் நிமித்தம் கொழும்பு உயர் நீதிமன்றுக்கு...
  மாகாணசபை மக்களின் உடனடிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம். மாகாணசபை கொடியயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென வடக்கு மாகாக சகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா சிக்கனகூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார். வவுனியா சிக்கனகூட்டுறவுச் சங்கத்தலைவர் நா.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவுச்சங்கத்தின் ஆளுனர்சபை உறுப்பினர்கள்ரூபவ் சங்கத்தின் உத்தியோகத்தர்கள்ரூபவ் பயனாளிகள் கலந்துகொண்டனர். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் போரினால்...
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கு விசாரணைகள் மேல்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. குறித்த வழக்கு இந்த மாத இறுதிப் பகுதியில் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிவான் வை.எம் எம்.றியால் இன்று தெரிவித்துள்ளார். குறித்த மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் ஊர்காவல்துறை நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம்...
தனது இரு குழந்தைகளையும் மிகவும் கொடூரமாக தாக்கிய தாய் ஒருவர் வரகாபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வரகாபொல-தொரவக்க பிரதேசத்தில் இருந்து இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்ற போதும் இந்தப் பெண் தனது குழந்தையை தாக்கிக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 வயதும், 4 மாதங்களுமேயான குழுந்தையை குறித்த தாய் தாக்கிக்கொண்டிருந்த போதே பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன்,...
காலம் எங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை. தரும் நம்பிக்கை கொள்ளுங்கள் என பாராளுமன்ற உருப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். முழங்காவில் விளையாட்டு விழாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (2) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முழங்காவில் விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய மறைந்தவர்கள் ஞாபகார்த்த நினைவு வெற்றி கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டுள்ளார். மேலும், இன்று ஒர் அருமையான உதை பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் கலந்து...
  எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு) எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு) நேரியகுளம் கிராமத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்துவரும் செய் முகதீன் நுர்ஜகான் தனது கணவரான அப்துல் கமீட் உமர் கக்தாப் புலிகளுக்கு உதவிசெய்தார் என கூறி கைது செய்யப்பட்டு கடந்த ஏழு வருடங்களாக சிறையிலிருப்பதாகவும் தனது வறுமை காரணமாக அவரை வழக்காடி...
வவுனியா நெளுக்குளம் பாடசாலை வாயிலில் பழைய மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (04.10.2016) காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டமொன்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் மைதானத்திற்குள் அதிபர் விடுதி கட்டப்படுவதனால் மைதானத்தில் விளையாடுவதற்கு மாணவர்களுக்கு இடவசதி இல்லாமல் போய்விடும் என்பதனால் இன்று நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட இருந்ததாக பழைய...
பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விடுதலைப் புலி சந்தேகநபர்களுடன் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாமல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது புலி சந்தேகநபர்களும் அவருடன் இருந்ததாகவும், அவர்கள் ஏன் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை என நாமல் என்னிடம் வினவினார். நீதிமன்றில் இது தொடர்பான வழக்குகள் உள்ளமையே பிரச்சினைக்கு...
உபாதைக்குள்ளான நிலையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அப்பலோ மருத்துவமனையில்  கடந்த 10நாட்களைக் கடந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு தற்போது செயற்கைச் சுவாசம் மருத்துவர்களால் ஏற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செயற்கையான முறையில் இயந்திரத்தின் மூலம் சுவாசம் வழங்கப்படுபவர்கள்  5% அல்லது 10%மானவர்களே உயிர் தப்புவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெஞ்சிலேட்டர் சிகிச்சை முறையே தற்போது அவருக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அவரது உடலில் கிருமிகளின் தாக்கம் அதிகமாக...