வாழைக்குழைகளுடன் கேரளா கஞ்சாவினை கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா - மன்னார் சந்தியில் வைத்தே 30 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 100 கி.கிராம் கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேகநபர் இன்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
100வீதம் இஸ்லாமியர்கள் வாழும் சம்மாந்துறையில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற வரலாற்றுப்பிரசித்திபெற்ற பத்ரகாளியம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் 800 ஆண்பெண் தேவாதிகள் ஆலய பிரதமபூசகர் மா.சதாசிவம் தர்மகர்த்தா எஸ்.சுப்பிரமணியம் முன்னிலையில் தீமிதிப்பில் ஈடுபட்டதுடன், பலருக்கு சாட்டையடி நிகழ்வும் இடம்பெற்றது.
எனினும் வெளிநாட்டில் இருந்தும் பல பக்த அடியார்கள் தீமிதிப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னர் பல நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இங்கு...
யாழ்ப்பாணத்தில் காவாலியாகத் திரிந்து பின்னர் அகதி விசாவில் பிரான்ஸ் சென்று அங்கு உள்ள தமிழ்க் குடும்பப் பெண்கள் மற்றும் இளம் தமிழ்ப் பெண்களை ஏதோ ஒரு விதமாக தன்வசப்படுத்தி அவர்களுடன் பாலியல் உற|வு கொண்ட அதை புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்து அவர்களை அச்சுறுத்தி பெருமளவு பணமும் நகைகளும் பறித்து வந்த இந்தக் காவாலி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்படும் காட்சி இதோ
இணையம்,சமூக வலைத்தளங்களில்…மற்றும் தொலைபேசிகள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி பல ஆண்கள்;...
எமது உடலைப் பற்றி எமக்கு தெரியாத சில உண்மைகள் இருக்கின்றது. அவற்றில் சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளுவோம்.
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450...
1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத் திட்டத்தை திட்டத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வெளியிடவுள்ளார்.
Thinappuyal -
இலங்கையை அபிவிருத்திசெய்வதற்கான தேசிய அரசின் 1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத்திட்டத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னர் வெளியிடவுள்ளார் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்துப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளியன்று நாடு திரும்பவுள்ளார்.
அதன்பின்னர், 1500 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவர் பலதரப்பினருடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வறுமை ஒழிப்புத் திட்டம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடே எழுக தமிழ் போராட்டம் – வாசுதேவ நாணயக்கார
Thinappuyal -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடே எழுக தமிழ் போராட்டம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையின் வெளிப்பாடே இந்த எழுக தமிழ் போராட்டம் என சுட்டிக்காட்டியுள்ள அவர் எழுக தமிழ் போராட்டத்தின் பின்னணியில் காலணித்துவ சக்திகள்...
இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர். தோர்ஜோன்கவுஸ்டசேதர்
Thinappuyal -
இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான நிலை குறித்து நோர்வே மக்களும் ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளின் மக்களும் முழுமையாக உணரவில்லை, இதன் காரணமாகவே அந்த நாடுகளில் இருந்து முதலீடுகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.
மூன்று தசாப்தபால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து...
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா மதப்பிரிவு மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் . 50-க்கும் அதிகமானோ காயம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வர்த்தக தொகுதியில் தற்கொலைக்குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு பாக்தாத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தற்கொலைத் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
வடக்கில் ஷபி அல்-போர் பகுதியில்...
மஹிந்தவின் பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுடன் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, அதற்கு முன்னர் பதவி வகித்த ஜனாதிபதியின் பெயர் பலகைகளை அகற்றி தமது பெயரை சூட்டிக்கொண்டதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பெயர் பொறிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரைத் தடாக அரங்கு பெயர்ப்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். நியூசிலாந்து விஜயத்தை முடித்துக் கொண்ட பிரதமர் தற்போது இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணம் செய்கின்ற பிரதமர் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளதுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.