ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சர்கள் குழு இந்தப் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல்களில் எல்லாம் இலங்கைக்கு பாராட்டு மழை பொழியப்பட்டுள்ளது.இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெருமிதமாக கூறியிருக்கிறார். இலங்கைக்கு...
இலங்கையிலிருந்து படித்தவர்கள் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் அறிவின் அடிப்படையிலான பொருளாதாரம் நோக்கி பயணிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா இன்று பலமான நாடாக மாறியுள்ளது ஏன்? சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவை விடவும் அதிகமாகும். இதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. அறிவுடைய எந்தவொரு நபரையும் எங்களுடைய நாட்டிற்கு எடுத்துக் கொள்வோம் என்ற கொள்கையில் அவர்கள் செயற்படுகின்றனர். இதனாலே அவர்கள் முன் செல்கின்றனர். இவை...
  எமது உணர்வுகளையும் மன வேதனைகளையும் சர்வதேச சமுகத்திற்கு உணர்த்த எழுக தமிழ் பேரணியில் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர். எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில் ஆரம்பமாகவுள்ளது. பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்தும் பேரணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவை பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் ஒன்றாக இணைந்து காங்கேசன்துறை வீதியினூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் நிறைவு பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும்...
  ‘எழுக தமிழ்’ எழுச்­சியும் அதன் அர­சியல் முக்­கி­யத்­து­வமும் திலீபன் (நன்றி - வீரகேசரி) எதிர்­வரும் 24ஆம் திகதி யாழ். முற்­ற­வெளியில் இடம்­பெ­ற­வுள்ள எழுக தமிழ் மக்­க­ளெ­ழுச்சி தொடர்பில் அனை­வ­ரது கவ­னமும் திரும்­பி­யி­ருக்­கி­றது. 2009இல் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்கம் இரா­ணுவ ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்ததன் பின்னர் வடக்கில் இடம்­பெறும் மிக முக்­கி­ய­மா­ன­தொரு மக்கள் நிகழ்­வா­கவே மேற்­படி எழுக தமிழ் நோக்­கப்­ப­டு­கி­றது. தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் இடம்­பெறும் இந்­நி­கழ்­விற்கு வடக்­கி­லுள்ள ஆட்டோ ஓட்­டுனர்...
வடமாகாண சுகாதார அமைச்சுக்கு ஒஸ்திரிய நாட்டினால் வழங்கப்படவுள்ள 900 கோடி ரூபாய் நிதியில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகள் அமைக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் வடமாகாணசபையின் 62 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் 9 மாகாணங்களையும் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மத்திய சுகாதார அமைச்சரை 3 மாதங்களுக்கு ஒரு...
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் சர்வதேச அளவில் நோய்களை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் 300 கோடி டாலர் நிதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஒரு விழா ஒன்றில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி சான் ஷுகர் பெர்க்கு கலந்துகொண்டனர். இதன் போது சர்வதேச அளவிலான நோய்களை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், 300 கோடி டாலர் நிதி உதவி வழங்க நான் தயாராக உள்ளேன்...
உலகின் முதற்தர இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள Mozilla Firefox உலாவியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிப்படையானதே. அவற்றுள் பிரதானமாக திகழ்வது ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்யும் போது ஸ்ரக் (Stuck or Freeze) ஆகின்றமையாகும். இதற்கு மல்டி புரோசஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக் குறைபாடு உட்பட மேலும் சில குறைபாடுகளை நீக்கியதாக புதிய Mozilla Firefox உலாவி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவற்றுக்கு மேலாக அன்ரோயிட் சாதனங்களில் Offline Mode இலும் இணையப்...
யாகூ இணையத்தளத்தை ஊடுருவி சுமார் 500 மில்லியன் கணக்குகளிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனை யாகூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஊடுருவல் அரசாங்க ஆதரவுடன் நடைபெற்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வல்லுநர்கள் அந்த ஊடுருவல்தான் இதுவரை நடத்தப்பட்ட இணைய ஊடுருவல்களிலேயே மிகவும் மோசமானது என கூறியுள்ளனர். மேலும் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பிறந்த நாள், கடவுச் சொற்கள், இணையக் கணக்கு தொடர்பான பாதுகாப்பு கேள்வி-பதில்கள்...
மலர்கள் என்றாலே கொள்ளை அழகு, அந்த மலர்களை பெண்கள் கூந்தலில் சூடிக் கொள்ளும் போது மிகவும் அற்புதமான அழகாக இருக்கும். இந்த மலர்களை நாம் ரசிக்க மட்டும் தான் முடியும், அதில் உள்ள சுவையான தேன்களை மனிதர்களால் எளிமையாக கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் அதை வண்டுகள் எளிமையாக கண்டுபிடித்து மலர்களில் உள்ள தேனை உறிஞ்சிக் கொள்ளும். தேன் எடுக்கும் சில வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது, அதே வேலையில் ஒருசில மலர்களில் மணமும்...
விமானங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் வட்டமாக இருப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது. விமானம் வானில் பறக்கும்போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும். விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதால், விமானத்தின் உள்ளே ஏற்படும் அழுத்தமானது அனைத்து இடங்களுக்கும் பரவி விடும். இதனால், விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. மாறாக விமானத்தின் ஜன்னல்கள் சதுரமாக இருந்தால், விமானத்தின் உள்ளே உள்ள...