இந்தியாவின் உரி ராணுவ முகாமில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவவீரர்கள் பலியானார்கள். அதில் வீரர் சுனில் குமார் வித்யார்த்தியும் ஒருவர், அப்படி தன் தந்தை இறந்த செய்திகேட்டு இதயம் உடைந்த நிலையிலும் அவருடைய மகள்கள் பள்ளியில் அன்றைய தேர்வை வந்து எழுதினார்கள். அது அவர்கள் குடும்ப தைரியமாக பாராட்டப்பட்டாலும் பார்த்தவர்களும் கேட்டவர்களும் அதை தாங்கும் தைரியமில்லாமல் உருகினர். உருக்கமான தேர்வு சுனில் குமார் வித்யார்த்திக்கு இரண்டு...
இரு கைகளை இழந்த போதிலும் தன் பல்லை வைத்து வயது முதிர்ந்த தன் தாய்க்கு சாப்பாடு ஊட்டி விடும் மனிதரின் வாழ்க்கை சம்பவங்கள் கேட்போரை நெகிழ்ச்சியடைய செய்கின்றது. Chen Xinyin (48) என்னும் நபர் சீனாவில் வசித்து வருகிறார். இவருக்கு இரு கைகளும் கிடையாது. அவர் ஏழு வயதாக இருக்கும் போது நடந்த மின்சார விபத்து ஒன்றில் தன் இரு கைகளையும் இழந்துள்ளார். பின்னர் தனது 20 தாவது வயதில் தனது...
சிங்கங்களுக்கு திருமணம் செய்து கொண்டாடிய நிகழ்வு ஒன்று பங்களாதேஷ் மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்றுள்ளது. சுமார் 400 விருந்தினர்கள் பங்கேற்க பலூன்களுக்கு இடையே “நோவா” எனும் பெண் சிங்கத்திற்கும், “நபா” எனும் புதிதாக வந்துள்ள ஆண் சிங்கத்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது வழக்கத்திற்கு மாறான நிகழ்வுதான் என்றாலும் மிருகக்காட்சி சாலையை அலங்கரிக்கவும், சிங்கங்களை வரவேற்கும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்குழந்தைகளை மகிழ்ச்சியளிப்பதற்காக திருமணத்திற்கு முன்னதாக நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திருமண நிகழ்ச்சில், 10...
ஆக்சிஜனை வளமைக்கு மாறாக குறைவாக உள்வாங்குவதால் திபெத்திய மக்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. சீனா திபெத்தில் வசிக்கும் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்கிறார்கள். அங்கு 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 100 வயதிற்கும் மேல் ஏராளமானோர் வாழ்வதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இருந்தும் சீனாவில் மற்ற பகுதிகளில் இந்த அளவுக்கு மக்கள் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை. எனவே இது தொடர்பாக சீனாவில் உள்ள அறிவியல்...
பிரான்ஸ் கடலில் சுற்றுலா சென்ற பெல்ஜியம் இளைஞர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகி பாறையில் சிக்கி கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு பகுதியான செயின்ட் ட்ரோப்ட்ஸ் கடற்கரையில் பெல்ஜிய நட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது தந்தைக்கு சொந்தமான படகில் நான்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் பயணித்த படகு கடலில் உள்ள பாறையின் மேல் மோதி சிக்கி கொண்டதை அடுத்து இளைஞர்களின் சுற்றுலா பயணம் பாதியிலே...
பிரபல ஹாலிவுட் ஜோடிகள் பிராட் பிட், ஏஞ்சலினா ஜுலி பிரிவதற்கு தான் காரணமில்லை என பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் கோட்டில்லார்ட் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் வாழ பிடிக்கவில்லை என அவரது மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான ஏஞ்சலினா ஜுலி விவாகரத்து கோரியிருந்தார். நான் விவகாரத்து வாங்குவதற்கு பிராட்பிட்டுக்கும், பிரான்ஸ் நடிகை மரியான் கோட்டில்லார்ட்டுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு தான் காரணம் என ஏஞ்சலினா...
யால தேசிய சரணாலயம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. எனினும், பிரபல அமைச்சர் ஒருவர் இரவில் இரகசியமாக குறித்த சரணாலயத்துக்கு சென்று வருவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 வீதமானோர் தென் மாகாணத்திற்கு செல்லாமல் போக...
ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற ஆர்வலர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏனெனில், இந்த அமைப்புகள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது என்பதற்கான எந்த சாட்சியங்களும் நிரூபிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இலங்கை குழுக்களுக்கு இடையில் நீண்டகால பிணக்கு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டாலும் ஐரோப்பிய நீதிமன்றத்தின்...
மத்தல சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 19 வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 7 நிறுவனங்களும், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் பெற்றுக் கொள்வதற்கு 2 நிறுவனங்களும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 10 நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளதாக...
வவுனியாவில் நீர்வடிகாலமைப்பு சபையால் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் நீரில் மண் கலந்து வருவதாக வவுனியா நகரையண்டி வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, வவுனியா நகரையண்டிய கற்குழி, வைரவபுளியங்குளம், குருமன்காடு போன்ற பகுதிகளுக்கான குழாய் நீரில் மண் கலந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அந்நீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காலைவேளைகளிலும், சில தினங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது. இதனால் நீர் கறுப்பு மற்றும் கலங்கல்...