இலங்கையில் சாத்தியமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இன்னும்பல விடயங்களை செய்யவேண்டியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்குழு தெரிவித்துள்ளது. இதில், குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும் என்று செயற்குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போன்ற விடயங்கள் முன்னேற்றகரமானவையாகும் என்று குழு தெரிவித்துள்ளது. தமது இலங்கை விஜயத்தின்போது இந்த விடயங்களை தாம் அவதானித்ததாக நேற்று ஐக்கியநாடுகள் மனித உரிமைகள்...
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ வெளியிட்டுள்ளார். மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம், தமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலானஉறவை பலப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ, கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகள் குறித்துகலந்துரையாடப்பட்டன. இந்த...
மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மொனராகலை சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. கடுமையான காற்றுடன் இவ்வாறு ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசு உலகில் உள்ள ஏனைய நாடுகளின் மனங்களை வென்றுள்ளதே தவிர வெளிநாட்டு முதலீடுகளை இவர்களால் பெறமுடியாது போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் அத்தனை தவறுகளுக்கும் தம்மீது குற்றஞ்சுமத்தப்படுவதாகவும், தன்னுடைய ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பத்தரமுல்லயில் கூட்டு எதிர்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆட்சியில் பொதுமக்கள் ஆதரவானது தேர்தல்கள் மூலம் கண்டறியப்பட்ட போதும் தற்போதைய அரசு...
இலங்கை துறைமுக தலைவராக செயற்பட்ட பிரியாத் பந்து விக்ரம மற்றும் வர்த்தகர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் கைது செய்யப்பட கூடும் என பாதுகாப்பு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த அனைவரும் ராஜபக்ச ரெஜிமென்டின் ஆட்சியின் போது பல்வேறு முறைக்கேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களாகும். அந்த காலங்களில் பிரியாத் பந்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் வெளிப்படுத்த முடியாமையே அவர் கைது செய்யப்படுவதற்கான பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவுக்கு...
இலங்கை - இந்தியாவிற்கிடையில் நேற்றைய தினம் மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைஉயர்த்தும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய கடல்வள பாதுகாப்பு அமைச்சர் வை.கே.சிங்கா மற்றும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் கீழ் 300 மில்லியன் பெறுமதியான மீன்படி உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தம் மூலம் 75,000 மீனவர்கள் மற்றும் விவசாயிகள்...
வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள் கொண்டுள்ளது. இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஒட்டத்தை சீராக்குவதில் இருந்து, பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க வைப்பது வரை பல நன்மைகள் தரவல்லது இந்த இயற்கை சிரப். இனி, வெங்காயம், தேன் கொண்டு தயாரிக்கப்படும் சிரப்பை எப்படி தயாரிப்பது? இதனை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என பார்க்கலாம்... தேவையான...
பொதுவாக நாம் அன்றாடம் பார்க்கும் பூக்கள் எவ்வாறு, எத்தனை நாட்களில் பூக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதுவும் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்குமா பூக்கள்... ஆம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் தெரியுமா?... அந்த மலரின் பெயர் அன்னப்பறவை மலர். இம்மலரானது கொடைக்கானல் தமிழ்நாடு விடுதியில் பூத்துள்ளது. 10 அடி முதல் 15 அடி உயரம் வரை மலரக் கூடிய இந்த மலர் அன்னப் பறவையின்...
  மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலனும், நடிகருமான ராகுல் சிங்குக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார். இந்தநிலையில், ஓஷிவாராவில் உள்ள ஒரு உணவகத்தில் 21 வயது நடிகை ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக நடிகர் ராகுல்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் சிங் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சம்பவத்தன்று தனது ஆண்...
இலங்கையின் தென் பகுதி காட்டில் அரியவகையான பாம்பு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கராஜ வனத்திலுள்ள மலைக் காடுகளை சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த வகையான பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபல பாம்பு நிபுணரான மென்டிஸ் விக்ரமசிங்கவினால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு Dendrelaphis Sinharajensis என்ற விஞ்ஞான பெயர் சூட்டப்பட்டுள்ளது. 672 மில்லி மீற்றர் நீளமான இந்த பாம்பினம், மிகவும் மெல்லிய உடல் தோற்றத்தினை கொண்டுள்ளது. பெரிய தட்டையான தலையை கொண்ட பாம்புகள் மிகவும் அரிய வகையானவை...