பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு விதியானது புஸ்ஸல்லாவ இளைஞன் உயிரிழந்த சம்பவத்தின் போது பின்பற்றப்படவில்லை என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார் இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நடைபெறும்போது அனைத்து சாட்சியங்களும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தமது கடமையில் இருந்து தவறியிருந்தாலோ அல்லது ஒழுக்கத்தை மீறி நடந்திருந்தாலோ...
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக சகல இராணுவ அணியினருடனும் இணைந்து தனதுதலைமைத்துவத்தின் கீழ் யுத்தத்தை வெற்றி கொண்ட விதத்தினை எதிர்வரும்நாட்களில் புத்தகமாக எழுதி வெளியிடப் போவதாக அமைச்சரும், முன்னாள் இராணுவத்தளபதியுமானபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமைச்சர் பொன்சேகாவினால் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்திற்கு தனதுவாழத்துக்களை தெரிவிப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். நேற்றிரவு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவ புலனாய்வு உறுப்பினர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள்தொடர்பிலும்...
கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது. இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும் இன்று ஆயிரக்காணக்கான பொது மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்றன. நேற்று முன்தினம் கல்குடா கடலில் குளிக்கச்சென்று நேற்று காணாமற்போன, 18 மற்றும் 21 வயதான சகோதரர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இந்நிலையில், கடலில் மூழ்கி பிள்ளைகள் இருவர் உயிரிழக்க, அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத...
வல்லப்பட்டைகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹொங்கொங் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கவிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 38 வயதானவர் என்றும், இவர் தொடர்பில் இலங்கை சுங்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து வல்லப்பட்டடைகளுடன், கொகுன் தொகையும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 10 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிாபல சிறிசேன, நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இதன் போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் 18 இந்தியப்...
2016 உலக Triathlon தொடர் மெக்ஸிகோவில் நடைபெற்று வருகிறது, இதன் இறுதிப்போட்டியில் பிரித்தானிய வீரர் ஒருவர் சுயநினைவின்றி ஓடிக்கொண்டிருந்த தனது சகோதரருக்கு உத்வேகம் அளித்து இரண்டாம் இடம் பெறசெய்து வெற்றி பெற வைத்துள்ளார். பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் Alistair, ஒடிக்கொண்டிருக்கையில் சுயநினைவை இழந்து ஓடமுடியாமல் தள்ளாடியுள்ளார். அப்போது இவரை கடந்து வந்த, தென் ஆப்பிரிக்க வீரர் Henri Schoeman வேகமாக ஓடி முதல் இடத்திற்கு முன்னேறினார். இதனால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட Alistair ஓடமுடியாமல்...
களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் அவுஸ்திரேலிய அணியின் பழைய ஆக்ரோசம் எங்கே போனது என அணியின் தலைவர் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அவுஸ்திரேலியா அணி வீரர்கள் சமீபகாலமாக களத்தில் அமைதியாக செயல்படுகின்றனர். இது அவுஸ்திரேலியா அணிக்கு சரிப்பட்டு வராது என்றும் பழைய ஆக்ரோசம் தேவை எனவும் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரின் போது ஆக்ரோசமான விளையாட்டு வார்னரைத் தவிர மற்ற வீரர்களிடம் இல்லை. இதனால் தான் இலங்கைக்கு எதிரான தொடரின்...
   சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்,'  (ஜூன் 12) உலக நாடுகள் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து...
அதிகாரி: சார் வணக்கம் புழல் ஜெயில் ராமராஜ் : நான் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் பேசறேன். புழல் சிறையில் ராம்குமார் சூசைட் செய்து கொண்டதாக சொல்கிறார்கள். அதிகாரி : அப்படி ஒன்றும் இல்லை சார் . உடம்பு முடியாமல் ஆஸ்பிட்டல் ஓ.பி.க்கு கூட்டிட்டு போயிருக்காங்க. அவங்க வீட்டுக்கு போன் பண்ணி சொன்னேன் ராமராஜ்: என்ன முடியாம போச்சு அவனுக்கு? திடீர்னு! நேத்து நல்லா தான் இருந்தான். நான் பாத்துட்டு வந்தேனே அதிகாரி: அப்படியா சார்…...
பாரத கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவும் கடந்த சில காலங்களாக கோபமாக இருந்தார்கள் என செய்தி வெளியாகியிருந்தன. இதனால் சிறைச்சாலையினுள் இருவரும் மோதல் ஏற்படுத்தி கொள்ளப்படும் அச்சம் சிறைச்சாலை அதிகாரிகளிடையே காணப்பட்டன. இந்த நிலையில் குறித்த இருவரும் சிறைச்சாலையினுள் சந்தித்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம்...