காஷ்மீரில் உரி நகர தாக்குதலின் போது உயிரிழந்த இராணுவவீரரின் மகன் என் அப்பாவின் கனவை நிறைவேற்றுவேன் என சபதமிட்டுள்ளார். காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய இராணுவமுகாம் செயல்பட்டு வருகிறது. இந்த இராணுவ முகாமுக்குள் கடந்த 18 ஆம் திகதி வெடிபொருட்களுடன் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். இதில் இராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 20 இராணுவவீரர்கள் உட்பட 4 தீவிரவாதிகள் இறந்தனர். இத்தாக்குதல்களில் இறந்த இராணுவவீரர்களில் ஹெரிவிதார் ரவிபாலும் ஒருவர், இவரின்...
இன்றைய காலகட்டமானது இணையம் இன்றி அணுவும் அசையாது என்ற நிலமைக்கு வந்துவிட்டது. அந்த அளவிற்கு அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றது இணையம். அதே போலவே இணையத்தளத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கும் தொழில் துறைகளை விளம்பரப்படுத்த முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இவற்றின் வரிசையில் தற்போது பேஸ்புக் மெசஞ்சரின் ஊடாக டொமினோஸ் பீட்ஸாவை ஆர்டர் செய்யக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவ் வசதியானது பீட்ஸா பிரியர்களுக்கு நிச்சியம் ஒரு குதூகலமான செய்தியாகவே இருக்கும். பீட்ஸா...
அமெரிக்காவில் உள்ள சாலை ஒன்றின் மத்தியில் காரை நிறுத்திய கருப்பின நபர் ஒருவரை பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Oklahoma மாகாணத்தில் உள்ள Tulsa என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று போக்குவரத்து பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்போது, கருப்பினத்தை சேர்ந்த கிறித்துவ பாதிரியாரான Terence Crutcher(40) என்பவர் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது, அவரது...
யாழில் தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு வேளைகளில் தெருக்களில் இளைஞர்களை ஒன்று கூட வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் குருநகர் பகுதிகளில் இளைஞர்கள் பொதுவாக தெருக்களில் நிற்பதாலும் போதைப் பொருள்பாவனை , மது பாவனை, அடிதடி சண்டைகள் இடம்பெற்று வருவதாலும் அப்பகுதிகளில் பொலிஸாரின் பார்வை அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகளும் ஏற்பட்டு வந்துள்ளது. குறித்த முரண்பாட்டிற்கு பின்னர் குருநகர் பகுதிகளில் உள்ள...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளரான சனத் பண்டார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று கொழும்பில் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து கடந்த 31ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மாணவர்களை சுற்றிவளைத்து...
புல்லுக்குளம் பகுதியில் இருந்து யாழ் பொது நூலகத்திற்கு செல்லும் வைத்தியலிங்கம் வீதி நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் காலங்களில் அவ் வீதி நடைபாதையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினுடைய நிதி உதவியில் யாழ் கலாச்சார நடுவண் நிலையம் யாழ் பொது நூலகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளமை தொடர்பான அறிவித்தல் கடந்த மாதம் யாழ்.மாநகர சபையினால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலாச்சார நடுவண் நிலையம் இலங்கை மதிப்பில் 1.7 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும்...
அநுராதபுரம், பொதெனாகம மின் உபகரண வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினை அடுத்து, தீயணைக்கும் படையினர் மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை தீ கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தீ அனர்த்தம் காரணமாக குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம்...
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இந்த நாடு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதையும் அவர்களது உரிமைகளை மறுப்பதையும் மையமாக வைத்தே தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் போட்டியிட்டிருந்தன. நாட்டை ஐக்கிய படுத்துவதற்காக உருவான 70 வருட பாரம்பரியம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தான் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக சாத்வீக ரீதியில் காலி முகத்திடலில் உண்ணாவிரதம் மேற்கொண்ட பொழுது சிங்கள...
  வவுனியா வடக்குப் பிரதேச சபையினை முழுமையாக சிங்கள மயமாக்கும் சூழ்ச்சியினை தடுத்து நிறுத்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையினர் அனைவரும் உடன் ஆவன செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் ஓர் அவசர கோரிக்கையினை கிராம அபிவிருத்திச் சங்கங்கள் விடுக்கின்றனர். இது குறித்து பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில் , வவுனியா வடக்கு பிரதேச சபைப் பிரிவில் தற்போது சுமார் 4500 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒரு...
இன்புளுவென்சா நோய்க்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு தேவையான வசதிகள்வைத்தியசாலைகளில் போதுமான அளவு இல்லை என அகில இலங்கை தாதியர் சங்கம்குற்றஞ்சுமத்தியுள்ளது. இதன் காரணமாக வைத்தியர்களுக்கும்,தாதியர்களுக்கும் இந்த நோய் தொற்றக்கூடியவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்கதெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த நோய் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துசுகாதார அமைச்சு அறிவுறுத்தல்கள் பல வழங்கியுள்ள போதிலும் ,குறித்தஅறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் முடியாதுள்ளதாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.