பிரேசிலில் நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்றுள்ளார். பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தது. இப்போட்டியில் 160 நாடுகளிலிருந்து 4.342 வீரர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடத்தப்பட்ட இந்த பாராலிம்பிக் திருவிழாவானது நேற்று அதிகாலை மரக்கானா மைதானத்தில்...
நியூயோர்க் Sheraton New York Times Square ஹோட்டலில் இன்று (செப் 19) இடம்பெற்ற கிளின்டன் பூகோளஅமையத்தின் 2016 வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்கலந்து கொண்டார். கிளின்டன் மன்றத்தின் உப தலைவர் செல்ஸியா கிளின்டன் இக்கூட்டத்தின் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். உலகலாவிய ஒற்றுமையினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கு இம்மாநாட்டின்போதுபாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இத்தாலிய பிரதமர் Matteo RENZI மற்றும் சுவீடனின் பிரதமர் Stefan Löfven உள்ளிட்ட...
இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் 150கி.மீற்றர் வேகத்திற்கு பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது வருத்தமளிப்பதாக பிரட் லீ தெரிவித்துள்ளார். டிஎன்பிஎல் போட்டிகளுக்காக இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ அது முடிவற்ற நிலையில் தற்போது பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும் வலுசேர்க்கும். இதன்...
அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் பிரிவில் தங்கம் வென்றும் முதல்வரை சந்திக்கமுடியவில்லை என பிளாட்னி மாறனின் தாய் தனலட்சுமி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு பிளாட்னி மாறன் என்ற மகன் உள்ளார். இவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், என் மகன் 15 வயதில் இருந்தே சிறப்பு ஒலிம்பிக் பிரிவில் பங்கெற்று வருவதாகவும், அதில் பல பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளான் எனவும், தற்போது கூட...
முகநூல் காதல் விவகாரத்தினால் வவுனியா பாரதிபுரத்தினை சேர்ந்த ரவீந்திரகுமார் சதீஸ் என்ற இளைஞன் கடந்த (18.09.2016) சவுதியில் தற்கொலை செய்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சதீஸ்(24வயது) என்ற இளைஞன் கடந்த 18மாதங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.இவர் நேற்று அதிகாலை 5.30மணியளவில் அவரது அறையில் ( சவுதிஅரேபியாவில்) தற்கொலை செய்துள்ளார். முகநூலில் ஏற்ப்பட்ட காதல் விவகாரத்தினால் இவர் தற்கொலை செய்துள்ளதாக இவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். மேலும் இவரது...
இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், பொறாமை பிடித்த வீரர்கள் சிலர் தனது புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சானியா மிர்சா, மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோருடன் நீண்ட காலமாக பயஸுக்கு கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சமீபத்தில் சானியா, விஷத்தன்மை வாய்ந்த நபரை வெல்வதற்கு ஒரே வழி, அவர்களுடன் விளையாடாமல் இருப்பதுதான் என்று லியாண்டர் பயஸ் கருத்துக்கு காட்டமாக டுவிட்டரில் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் பயஸ்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாகவே 34 வயதான குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ளார். குலசேகரவின் கார் பைக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பைக்கில் வந்த 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்ட குலசேகர பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூனியர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. pistol, rifle, shotgun ஆகிய பிரிவுகளில் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற இந்தப்போட்டிகளில் இந்திய வீரர் சுபான்கர் பிரணிக், 50 மீற்றர் rifle prone பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான சாம்பாஜி...
பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தை முன்னிட்டு அமைச்சர்கள், எம்.பிக்கள், மகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை இடை மறித்து புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பிரதேச செயலகம் முன்பாக 19.09.2016 அன்று 9.00 மணியளவில் தங்களுக்கு நிரந்தர வீட்டினைப் பெற்றுத்தரக்கோரியும் 5வருடம் மீள் குடியேற்றம் செய்யப்பட்டும் இதுவரைக்கும் இராணுவத்தின் வசம் இருக்கும் தங்கள் சொந்தக் காணிகளையும், வீடுகளையும் மீளப் பெற்றுத்தரக்கோரியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் கோரிக்கை மனுவினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரணவநாதன், அமைச்சர் றிசாட்...
சிறுதானியங்கள் மற்றும் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். தினமும் ஏதேனும் ஒரு வேளை உணவையாவது, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும். குழந்தைகளின் எதிரே, உணவு மீதான விருப்பு வெறுப்புகளைக் காட்டாதீர்கள். காபி / டீ அல்லது ஆரோக்கியத்துக்காக விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் எதையும் மருத்துவர் / ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை இன்றி குழந்தைக்குப் பழக்கப்படுத்தாதீர்கள். சிறுதானியங்கள் மற்றும் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். உதாரணத்துக்கு, தரையில் அமர்ந்து சாப்பிடும்...