உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது.
இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை வலுப்பெறவைக்கின்றன.
ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய்...
இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் தன் கவனம் முழுவதையும் சினிமாவில் மட்டும் செலுத்தி வருகிறார். பைரவா படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் ஒரு சிலர் வேண்டுமென்றே இவர் தன் மக்கள் இயக்கத்தை அடுத்த தேர்தலுக்கு தயார் படுத்தி வருகிறார்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகளை கிளப்பி வருகின்றனர், இதுக்குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இதனால், யாரும் இதுப்போன்ற வதந்திகளை நம்ப...
ரெமோ ட்ரைலர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இந்த ட்ரைலரில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் அசத்துகிறார்.
மேலும், சத்யம் தியேட்டர் வாசலில் நின்று நாமும் சூப்பர் ஸ்டார் போல் வரவேண்டும் என்று கூறுகிறார்.
ட்ரைலரில் ஒரு இடத்தில் பில்லா லோகோவை தன் வீட்டில் ஒட்டி வைத்துள்ளார், அஜித் ஸ்டைலில் தெறிக்க விட்றோம் என கூற, பிறகு என்ன சிவகார்த்திகேயன் படத்தில் தல ரசிகர் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சௌந்தர்யாவின் விவாகரத்து பிரச்சனை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அது அவரின் தனிப்பட்ட விருப்பம், இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.
மேலும், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறி முற்று புள்ளி வைத்துவிட்டார், இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், இன்று சௌந்தர்யாவின் பிறந்தநாள்.
இவருக்கு டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது, சௌந்தர்யாவை ரஜினியின் மகளாக தான் பலருக்கும் தெரியும்.
ஆனால், அவர் பல படங்களில் அனிமேஷன் பணிகளை செய்துள்ளார், இந்தியாவிலேயே மோசன்...
விக்ரம், விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் விக்ரமின் இருமுகன் படம் திரைக்கு வந்தது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது பல ரசிகர்கள் இவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
மேலும், எப்போது மலையாளத்தில் நேரடியாக நடிப்பீர்கள் என கேட்டு ரசிகர்கள் கூச்சலிட, விக்ரம் சிறிது நேரம் யோசித்தார்.
பிறகு அவர், சரி இதை நான் விஜய் ஸ்டைலில் சொல்கிறேன், “ஐயம் வெயிட்டிங்”...
சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவெல-குடகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
34 வயதான செல்வராஜ் ரவீந்திரன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக அவிசாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் குறித்த ஆற்றுப் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது பொலிஸாரிடம் தப்பித்துக் கொள்வதற்காக குறித்த நபர் ஆற்றில் பாய்ந்துள்ளதாகவும், இதன்போதேஉயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.
மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகவே வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த, தனது சட்டத்தரணி ஊடாக இன்று நீமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.
சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி...
கணக்கு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பயந்து ஓடும் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிகிதா கணிதத்தில் எந்த மாதிரியான பிராப்ளம் கொடுத்தாலும் அதற்கு சரியான பதிலை சொல்லிவிடுகிறார்.
சென்னை, பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில்தான் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் நிகிதா. ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் நடைபெறும், அகில இந்திய கணித அறிவியல் திறனறித் தேர்வில் (ALL INDIA MATHS...
நடிகை சமந்தாவுக்கு சென்னையிலும் ஐதராபாத்திலும் இந்து–கிறிஸ்தவ முறைப்படி இரண்டு தடவை திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காதல்
நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நாகார்ஜுனா கூறியுள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தத்தையும் அடுத்த...
சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் தற்கொலை சம்பவத்தில் புழல் சிறையில் நடந்தது என்ன? என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தற்கொலை
சுவாதி கொலை குற்றவாளியான ராம்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொள்ள முடியுமா? அது சாத்தியமா? என்பது போன்ற பல கேள்விகள் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
ராம்குமாரின்...