ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நியூயோர்க்கில் நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், 12 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் இத்தாலி, சுவீடன் பிரதமர்கள் மற்றும் சிறிலங்கா அதிபரும் உரையாற்றினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி மகேஸ்வர குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினர் குழந்தைகளுக்கான கார் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். மூன்று மாதங்களில் பகுதி நேரமாக உருவாக்கப்பட்ட குறித்த காருக்கு, 30 ஆயிரம் ரூபா வரை செலவுசெய்யப்பட்டுள்ளது. கழிவுப்பொருட்கள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மாதிரிக் காரில் ஒரு குழந்தை மாத்திரம் பயணம் செய்ய முடியும். இதேவேளை, மின்கலம் (பற்றரி) மூலம் இயங்கும் இக் கார், குறுகிய மற்றும்...
இலங்கையில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வேலையற்றோர் வீதம் 4.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளி விபரவியல் மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவைத் துறையில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும். முதல் காலாண்டு இறுதியில் நாட்டின் பணிகளில் ஈடுபட்டு வருவோரின் மொத்த எண்ணிக்கை 7,969,000 ஆகும். இந்தக் காலப் பகுதியில் சேவைத் துறையில் புதிதாக 155,638 பேர் பணிகளில் இணைந்து கொண்டுள்ளதுடன், கைத்தொழில் துறையில் 72,273...
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் எப்படியெல்லாம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய வாலிபருக்கு பேஸ்புக் நிறுவனம் 10.70 லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இன்று பரவலாக பயன்படுத்தபடும் வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. தனது பேஸ்புக் பக்கத்தை பாதுகாக்க அந்நிறுவனம் பவுண்டி புரோகிராம் என்ற குறைகளை சுட்டிக்காட்டும் திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஹேக்கர்கள் கலந்து கொண்டு பேஸ்புக் பக்கத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பரிசுகளை...
2018ஆம் ஆண்டு இலங்கை இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குரிய மின்சார சபையின் நீண்டகால திட்டத்திற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டளவில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு நான்கு வருடங்களுக்கு எட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதன்படி, டீசல் மூலம் இயங்கும்...
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கிலிருந்து கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச்சபைக் கூட்டம் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ளது. இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பது சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் முன்வைக்கப்படும்...
15 வயது பாடசாலை மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வலஸ்முல்ல-போவல பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மேலும், பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் படுத்திய நபர் ஒரு குழந்தையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் தங்கல்ல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றித்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேகநபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தங்கல்ல வைத்தியசாலையில்...
அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். தேவையற்ற வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் எவ்வித பயனும் இல்லாது...
சுவாதி கொலை தொடர்பிலும் கைது செய்யப்பட்ட ராம் குமார் தொடர்பிலும் பல்வேறுபட்ட முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று சிறையில் மரணமடைந்தார். இது தற்கொலை எனக் கூறப்பட்டது எனினும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என ராம்குமார் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி ராம்ராஜ் இன்று தெரிவித்தார். பல்வேறுபட்ட குழப்பங்களில் உள்ள ராம்குமாரின் மரணம் தொடர்பில் சட்டத்தரணி ராம்ராஜிடம் லங்காசிறி கருத்து வினவிய போதே அவர் இதனை...
தற்போது வரையில் அரசியல் வங்குரோத்து உடைவர்கள் பலரின் ஊடக மையமாக வெலிக்கடை உட்பட சிறைச்சாலைகள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆட்சி காலத்தினுள் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி, அரச திறைச்சேரிகளை வெறுமையாக்கி, மோசடிகளின் மூலம் தங்களின் பைகளை நிறப்பிக் கொண்டவர்கள் சட்டத்தினுள் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பல முறை சிறைச்சாலை செல்வதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் அரசியல்வாதிகள் அந்த குற்றச்சாட்டுகள் தங்களுக்கு...