சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவெல-குடகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 34 வயதான செல்வராஜ் ரவீந்திரன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக அவிசாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் குறித்த ஆற்றுப் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது பொலிஸாரிடம் தப்பித்துக் கொள்வதற்காக குறித்த நபர் ஆற்றில் பாய்ந்துள்ளதாகவும், இதன்போதேஉயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகவே வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த, தனது சட்டத்தரணி ஊடாக இன்று நீமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி...
  கணக்கு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பயந்து ஓடும் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிகிதா கணிதத்தில் எந்த மாதிரியான பிராப்ளம் கொடுத்தாலும் அதற்கு சரியான பதிலை சொல்லிவிடுகிறார். சென்னை, பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில்தான் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் நிகிதா. ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் நடைபெறும், அகில இந்திய கணித அறிவியல் திறனறித் தேர்வில் (ALL INDIA MATHS...
  நடிகை சமந்தாவுக்கு சென்னையிலும் ஐதராபாத்திலும் இந்து–கிறிஸ்தவ முறைப்படி இரண்டு தடவை திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காதல் நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நாகார்ஜுனா கூறியுள்ளார். வருகிற டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தத்தையும் அடுத்த...
  சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் தற்கொலை சம்பவத்தில் புழல் சிறையில் நடந்தது என்ன? என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை சுவாதி கொலை குற்றவாளியான ராம்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொள்ள முடியுமா? அது சாத்தியமா? என்பது போன்ற பல கேள்விகள் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ராம்குமாரின்...
  ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நியூயோர்க்கில் நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், 12 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் இத்தாலி, சுவீடன் பிரதமர்கள் மற்றும் சிறிலங்கா அதிபரும் உரையாற்றினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி மகேஸ்வர குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினர் குழந்தைகளுக்கான கார் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். மூன்று மாதங்களில் பகுதி நேரமாக உருவாக்கப்பட்ட குறித்த காருக்கு, 30 ஆயிரம் ரூபா வரை செலவுசெய்யப்பட்டுள்ளது. கழிவுப்பொருட்கள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மாதிரிக் காரில் ஒரு குழந்தை மாத்திரம் பயணம் செய்ய முடியும். இதேவேளை, மின்கலம் (பற்றரி) மூலம் இயங்கும் இக் கார், குறுகிய மற்றும்...
இலங்கையில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வேலையற்றோர் வீதம் 4.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளி விபரவியல் மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவைத் துறையில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும். முதல் காலாண்டு இறுதியில் நாட்டின் பணிகளில் ஈடுபட்டு வருவோரின் மொத்த எண்ணிக்கை 7,969,000 ஆகும். இந்தக் காலப் பகுதியில் சேவைத் துறையில் புதிதாக 155,638 பேர் பணிகளில் இணைந்து கொண்டுள்ளதுடன், கைத்தொழில் துறையில் 72,273...
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் எப்படியெல்லாம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய வாலிபருக்கு பேஸ்புக் நிறுவனம் 10.70 லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இன்று பரவலாக பயன்படுத்தபடும் வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. தனது பேஸ்புக் பக்கத்தை பாதுகாக்க அந்நிறுவனம் பவுண்டி புரோகிராம் என்ற குறைகளை சுட்டிக்காட்டும் திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஹேக்கர்கள் கலந்து கொண்டு பேஸ்புக் பக்கத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பரிசுகளை...
2018ஆம் ஆண்டு இலங்கை இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குரிய மின்சார சபையின் நீண்டகால திட்டத்திற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டளவில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு நான்கு வருடங்களுக்கு எட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதன்படி, டீசல் மூலம் இயங்கும்...