சம்பூர் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதால் நாட்டின் மின்சாரத் துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத்தினை நிறுத்த கோரி சம்பூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய குறித்த திட்டத்தை அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதால் இலங்கை மின்சாரசபைக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பூர் அனல்...
புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரேத பரிசோதனையை வீடியோ படம் எடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று சிறையில் உள்ள மின்சார வயரை கடித்ததால் மின்சாரம் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வரும் அனைவரும் வாக்காளர் இடாப்பில் இணைக்கப்படுவர் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அவர் மேலும் கூறுகையில், போர் காரணமாக பாதிக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரும்...
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார். நியூயோர்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 29 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள், நியூயோர்க்கில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று ஆரம்பமாகும் ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையாற்றுவதற்கு நாளை மறு...
விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் மூன்றாம் வாரத்தில் 22 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதலாம் வாரம் கடந்த 2ம் திகதி வெள்ளிக்கிழமையும், இரண்டாம் வாரம் 9 ம் திகதி வெள்ளிக்கிழமையும், மூன்றாம்...
கிளிநொச்சி பொது சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர சபையினால் நிருவகிக்கப்பட்டு வரும் இந்த சந்தைத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் 57 கடைகள் முழுமையாக தீயினால் அழிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், பொலிஸார், இராணுவம், விமானப்...
இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் டோனிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும். இதனை அவரே ஒருமுறை பேட்டியின் போது தெரிவித்துள்ளார், இந்நிலையில் தற்போது TNPL கிரிக்கெட் போட்டிக்காக அவர் அளித்துள்ள பேட்டியில் தனக்கு பிடித்த தமிழ் ஹீரோ யார் என தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை அவருக்கு மிகவும் பிடிக்குமாம். "எனக்கு பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்த சொன்னால், முதல் மூன்று இடங்களில் ரஜினி மட்டுமே...
உலகளாவிய ரீதியில் இணையத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. உலக நாடுகளில் இணையம் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வினை ஒப்பிடும் போதும், அதிக இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடுகளில் 86வது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. 196 நாடுகளிலேயே இலங்கைக்கு 86வது இடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் இணையத்துடன் இணைந்துள்ள நபர்களின் எண்ணிக்கை 19 வீதமாகும். கையடக்க தொலைப்பேசிகளில் இணையத்தை பயன்படுத்துபவர்களும் இந்த பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். உலகின் நிலையான வீட்டு...
தமது பிள்ளைகளின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 18 வயது மற்றும் 21 வயதான இரண்டு பிள்ளைகளும் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். மட்டக்களப்பு கல்குடாவில் கடலில் குளிக்கச் சென்ற போது இவர்கள் காணாமல் போயுள்ளனர். இரண்டு சகோதரர்களும் காணாமல் போனதாகவும் இவர்கள் இருவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த செய்தியைக் கேள்வியுற்ற பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த சகோதரர்களின் பெற்றோர் சடலமாக...
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடர் இன்று நியூயோர்க்கில் ஆரம்பமாகிறது. பலத்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட குண்டுகள் வெடிக்க செய்தமையால் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 29 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் இதுவரை உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேவேளை வெடிக்காத நிலையில் சில குண்டுகள்...