பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் இளம்பெண் ஒருவரை 3 புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகரில் பெயர் வெளியிடப்படாத 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் 17 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடன் இளம்பெண் பழகியுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் சந்திக்கலாம் என அந்த வாலிபர்...
  உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்தை பாதுகாக்க சில நேரம் மேலும் ஒரு ஷரத்தை சேர்க்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து மல்வத்து மாநாயக்க தேரருடன் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். உத்தேச புதிய அரசியலமப்புச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மாத்திரமல்லாது பிரதேச சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்ற மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும். பௌத்த மத்திற்குரிய...
  சம்பூர் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதால் நாட்டின் மின்சாரத் துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத்தினை நிறுத்த கோரி சம்பூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய குறித்த திட்டத்தை அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதால் இலங்கை மின்சாரசபைக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பூர் அனல்...
  போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தமிழர் அரசியல் தரப்பு, தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பான எந்த உறுதியான நிலைப்பாட்டுக்கும் வரமுடியாத நிலையில்தான் இருக்கிறது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு முந்திய பல தசாப்தங்களாக தமிழர்களால் பேசப்பட்டு வந்த பிரதான விடயம், அதிகாரப் பகிர்வோ,...
  நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சீ.சீ.டீ.வி கெமரா பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் மஹர மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளிலேயே முதன்முதல் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க முடியும் என்றும்,இதற்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் பல்கலைக்கழகங்களின் ஊடாக பெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அடுத்த வருடம் இந்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் பொருத்தும்...
  அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை, பணச் சலவை, தவறான முறையில் பணத்தை சம்பாதித்தமை, போலி ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதியானத்தை அடுத்து சீ.எஸ்.என். தொலைக்காட்சி மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்கும் ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர் சீ.எஸ்.என் ஊடக வலையமைப்பு மற்றும் அதற்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க முடியும்...
  கண்டி - கட்டுகஸ்தோட்டை பொதுச் சந்தைக்குள் காரொன்று புகுந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
  விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல் துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. குறித்த நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வேந்தன்,...
  புஸ்ஸல்லாவயில் நேற்று பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் வயது 28 என்ற இளைஞன் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார். எனினும் அவர் தூக்கில் தொங்கியதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இது கொலையாக இருக்கலாம் என்று பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவித்து பொலிஸாருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர். 4 அடி உயரமான சிறைக் கதவில்...
  பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக இடம்பெற்றது. கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாகவும், கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாறு பல சிறப்புடன் விளங்கும் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று மாலை அடியார்களின் அரோகரா கோஷத்துடன்...