அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் பாரிய பிரச்சினை ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தது. அதாவது மிக்கலவடுக்கு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தான் புதிதாக அறிமுகம் செய்த லட்சக்கணக்கான Galaxy Note 7 கைப்பேசிகளை மீளப் பெற்றிருந்தது. இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பிரதான நோக்கம் அப்பிளின் அறிமுகம் செய்துள்ள புதிய கைப்பேசிகள் மீதான பார்வையை குறைப்பதாகும். இந்த எதிர்பார்ப்பில் இடி விழுந்துள்ள நிலையில் உடனடியாக Galaxy A8 எனும்...
அபிவிருத்திகள் நடைபெறுகின்றபோது சமநேரத்திலேயே தீர்வினையும் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண வேலணைத் துறையூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 2009ம் ஆண்டிற்குப் பின்னர் நெருக்கடிகளுக்கு மத்தியில் நகர்ந்துக் கொண்டிருக்கின்றோம். வடமாகாண சபை உருவாக்கப்பட்டு அதனூடாகவும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதனூடாகவே...
  புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். குறித்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. புதிய விமானப்படை தளபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதியை எயார் மார்ஸல் கபில ஜயம்பதி சந்தித்துள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது விமானப்படை தளபதி ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாகியுள்ளது. ஜனாதிபதியினால் குறிக்கப்படும் தினத்தில் உயிர் போகும் வரை வெலிக்கடை சிறைச்சாலையினுள் அவர்களை தூக்கிலிடுமாறு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு மாத்திரமின்றி, போகம்பர அல்லது வெலிக்கடை சிறைச்சாலையினுள் உயிர் போகும் வரை அவர்களை தூக்கிலிடுமாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பில்...
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனைப்பகுதியில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார். மாமாங்கம் பகுதியை சேர்ந்த விஜித் சோமசிறி என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். ...
ஹம்பாந்தோட்டை, பத்தகிரியவின் இளைஞர் பொலிஸ் காவலில் இருந்து காணாமல் போன விடயத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். குற்றப்புலனாய்வு துறையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, உரிய பணிப்புரைகளை குற்றப்புலனாய்வு துறையினருக்கு வழங்கியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரையாற்றவிருக்கின்ற நிலையில் அரசாங்கத்துக்கு சங்கட நிலையை ஏற்படுத்துவதற்காகவே இந்த காணாமல் போன சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்...
இலங்கையில் சாத்தியமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இன்னும்பல விடயங்களை செய்யவேண்டியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்குழு தெரிவித்துள்ளது. இதில், குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும் என்று செயற்குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போன்ற விடயங்கள் முன்னேற்றகரமானவையாகும் என்று குழு தெரிவித்துள்ளது. தமது இலங்கை விஜயத்தின்போது இந்த விடயங்களை தாம் அவதானித்ததாக நேற்று ஐக்கியநாடுகள் மனித உரிமைகள்...
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ வெளியிட்டுள்ளார். மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம், தமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலானஉறவை பலப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ, கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகள் குறித்துகலந்துரையாடப்பட்டன. இந்த...
மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மொனராகலை சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. கடுமையான காற்றுடன் இவ்வாறு ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசு உலகில் உள்ள ஏனைய நாடுகளின் மனங்களை வென்றுள்ளதே தவிர வெளிநாட்டு முதலீடுகளை இவர்களால் பெறமுடியாது போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் அத்தனை தவறுகளுக்கும் தம்மீது குற்றஞ்சுமத்தப்படுவதாகவும், தன்னுடைய ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பத்தரமுல்லயில் கூட்டு எதிர்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆட்சியில் பொதுமக்கள் ஆதரவானது தேர்தல்கள் மூலம் கண்டறியப்பட்ட போதும் தற்போதைய அரசு...