மாத்தளை, கஹல்ல மில்லேகொட பிரதேச கிராமம் ஒன்று நாட்டுக்கே மிளகாய் விநியோகம் செய்யும் அளவுக்கு விளைச்லை மேற்கொண்டு வருவதாக அறிய முடிந்தது. ஒரு தடவையில் சுமார் இருபதாயிரம் கிலோ மிளகாய் இங்கு விளைச்சல் செய்யபடுவதகவும், இலங்கையில் காய்ந்த மிளகாய் மத்திய நிலையமாக இந்த கிராமமே காணபப்டுவதகவும் தெரிவிக்கபடுகிறது.
  மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயான நூர் முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்...
  பாம்பன் அருகே குந்துக்கால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய புள்ளிசுறாவை உடல்கூற்று சோதனை செய்து மணலில் புதைத்தனர். உலகிலேயே அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார்வளைகுடா கடற்பகுதியாகும். இந்நிலையில் குந்துகால் கடற்கரையில் சுமார் 1500 கிலோ எடையும் 17...
மொனராகல ஜிலோன் மலையில் அமைந்துள்ள ஊவா மாகாண சபையின் கல்வி அமைச்சுக்கு சொந்தமான சுற்றுலா பங்களாவில் இருந்த பல மில்லியன் பெறுமதியான தங்கப்பீங்கான்கள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பெறுமதிகள் குறைந்த மேசை, கதிரை உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வரும் பொலிஸார் பல மில்லியன் பெறுமதியான பொருள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை...
  ஆசை வார்த்தை கூறி மூளை சலவை செய்து சாட்னாவை தங்களிடம் இருந்து பிரித்து விட்டதாக சாட்னா டைட்டஸ் தாயார் பட வினியோகஸ்தர் மீது புகார் கூறியுள்ளார். விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நாயகியாக அறிமுக மானவர் சாட்னா டைட்டஸ். இவரை பட வினியோகஸ்தர் கார்த்தி ரகசிய திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம் என்று கார்த்தி கூறி இருக்கிறார். இதை சாட்னாவின்...
குரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்… ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது… முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது.. அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில் அமைவதால் கூடுதல் நன்மை.. குருப்பெயர்ச்சி 2016-2017 எல்லோரும் நன்மைகள் வாரி வழங்கிட...
  அமெரிக்காவில் 67 வயதான பெண் ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் பெண் சாரியேட் கட்டன்பெர்க். 67 வயதான இவர் தனது உடல் முழுவதும் பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார். அதாவது உடலில் 91.5 சதவீதம் பச்சை குத்தியுள்ளார். இதன்மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதை தவிர சீனியர் சிட்டிசன் ஆன இவர் உடலில் பல டிசைன்களில் பச்சை குத்தி...
உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன், ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு கனமே இருந்த சவ்வுப்படலத்தை கண்ணில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். மிகவும் நுணுக்கமான இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவரின் கை நடுக்கங்ளைக் கூட அந்த ரோபோ வடிகட்டி தடுத்துவிடுகிறது.மனித கைகளைவிட ரோபோவின் கைகள் மிகவும் துல்லியமாக...
விமானங்களில் காணப்படும் சில்லுகள் இயங்காவிட்டால் அவ் விமானங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க முடியாது. அப்படியான துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் 14 தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ள சரக்கு விமானம் ஓடு பாதையை அண்மித்ததும் சில்லுகளை வெளியேற்ற முடியாமல் திணறியுள்ளது. செய்வதறியாது திகைத்த விமானி தொடர்ந்து ஓடு பாதையில் விமானத்தை செலுத்தியுள்ளார். இதன்போது விமானத்தின் உடல் தரையில் தேய்ந்தவாறு பயணிக்க அவ்விடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது....
கிளிநொச்சி பளை, புதுக்காடு சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன், வவுனியாவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...