மன்னார் எழுத்தூர் நீர்த்தாங்கியிலிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு உள்ளக குடி நீர் இணைப்புக்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன் னெடுக்கப்பட்ட உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத்திட்டத்திற்கு அமைவாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து குடி நீர் இணைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக தாழ்வுபாடு, பட்டித்தோட்டம், கீரி, தாராபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளடங்களாக நீர் இணைப்பிணை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே புதிய...
வட மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற அடிப்படையில் மாகாண அரச சேவையில் உள்ளீர்க்கப்படுபவர்களுக்கான வயதெல்லையை 35ல் இருந்து 45ஆக அதிகரிக்க கோரி வடமாகாண அமைச்சரவை விடுத்த கோரிக்கையை ஆளுநர் றெஜினோல்ட் குரே அங்கீகரித்து, வடமாகாண அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான உச்ச வயதெல்லையாக 40 வயதை அறிவித்திருக்கின்றார்.
மாகாண அமைச்சரவை வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்டு பல இழப்புக்களை சந்தித்த மாவட்டம் என்ற வகையில், மாகாண அரச சேவையில் உள்ளீர்ப்பு...
யாழ். கைதடியில் உள்ள பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் நவீனரக பனை ஏறு கருவி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Thinappuyal -
யாழ். கைதடியில் உள்ள பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் நவீனரக பனை ஏறு கருவி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யப்பான் நாட்டின் தொழில்நுட்பத்துடன் அண்மையில் யப்பான் நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்தக் கருவிகள் யாழ்ப்பாணத்தில் பரீட்சார்த்தத்திற்கு விடப்பட்டுள்ள நிலையில் பரீட்சார்த்தம் வெற்றியளித்துள்ளதாகப் பனை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு புனர் நிர்மாணம் மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அண்மையில்...
நாம் இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்கள் அதனால் இழப்புகளை சந்தித்தவர்கள்-பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்
Thinappuyal -
நாங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இந்த குடியிருப்பில் இருக்கின்ற அனைவரும் இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்கள் அதனால் இழப்புக்களை சந்தித்தவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.
அண்மையில் கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் கேட்டறியும் முகமாக பன்னங்கண்டி பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,
இந்த...
தமிழகம்- கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இன்று திருமணத்துக்காக நடந்தே வந்த மணப்பெண்கள்
Thinappuyal -
கர்நாடகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழக எல்லை வரை மணப்பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தனர்.
வன்முறை
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல இடங்களில் வன்முறை நடந்து வருகிறது. இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் இரு மாநில எல்லைகளான ஓசூர் ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டனர்....
துமிந்த சில்வா பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோறு பொதிகளை விற்றுள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். துமிந்த சில்வா செல்வந்தர் ஆனது எப்படி?
Thinappuyal -
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோறு பொதிகளை விற்றுள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுதியுள்ள ஜன அரகலயக்க திய சலக்குன என்ற நூல் வெளியிட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
துமிந்த சில்வா என்ற நபர் பாதுகாப்பாக இந்த சமூகத்தில்...
இரட்டைக்கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டி வீதியில் இறங்கிய பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
Thinappuyal -
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏறாவூர் பள்ளிவாசலுக்கு முன்பாக நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர் சமூகசேவை அமைப்பு, பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்ட தாயான நூர்முஹம்மது ஹுஸைரா (56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணு...
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவங்ச அங்கு செல்லும் முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு சந்தித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க நேற்றிரவு முதல் கடும் முயற்சிகளை மேற்கொண்ட வீரவங்ச இன்று காலை அவரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய விமல்...
பிரித்தானியாவில் கணவர் ஒருவர் தம்மீது இரக்கம் காட்டாத மனைவியை இணையதளத்தில் ஏலம் விட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் யார்க்ஷயர் பகுதியில் குடியிருந்து வருபவர் 33 வயதான டெலிகொம் பொறியியலாளர் சைமன் கேன். இவர் தமது மனைவியை இரக்கமற்றவர் என கூறி வர்த்தக இணையத்தளம் ஒன்றில் விற்பனைக்கு வைத்துள்ளார்.
இரக்கமற்றவர் என்ற தலைப்பில் தமது மனைவி 27 வயதான லியாண்ட்ரா என்பவரை இணையத்தில் விற்பனைக்கு வைத்த சைமனுக்கு அடுத்த இரண்டு...
தாக்குதலுக்காக ஐஎஸ் அமைப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டவர்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜேர்மனியில் சிரியாவின் ஹோல்ஸ்டெயின் நகரைச் சேர்ந்த 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசார் விசாரணையின் போது, ஒருவரின் பெயர் மொகமத்(20) என்றும் கடந்த நவம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு ஜேர்மனியில் குடி பெயர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
மற்ற இருவர்களின் பெயர்களை தெரிவிக்கவில்லை. இவர்கள் ஜேர்மனியில் எங்கு தாக்குதல் நடத்த வேண்டும்...