பொலிசாரால் தேடப்பட்டு வந்த பெண் சட்டத்தரணி சர்மினி மல்லாகம் நீதிமன்றில் ஆயர் மல்லாகம் நீதிமன்றப்பதிவாளரைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய சட்டத்தரணி சர்மினியை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில் செல்ல, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளார்.
யாழ்ப்பாண நீதித்துறை வரலாற்றில் சட்டத்தரணிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பின்னர் அவர், பிறிதொரு சட்டத்தரணியூடான மன்றில் இன்று ஆஜராகிப் பிணை கோரிய முதலாவது சம்பவமாக இது...
இராணுவம் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை – சொந்த நிலங்களை கைப்பற்ற தயாராகும் வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ். சஜீவன்
Thinappuyal -
இராணுவம் எங்களைச் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை சொந்த நிலப்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதற்குத் தயாராக இருக்கிறோம் என வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ். சஜீவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலும், பலாலி இராணுவப் பிரதேசத்திலும் இராணுவத்தினரிடமுள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் எஸ். சஜீவன்...
பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்த கைதிக்கு மீண்டும் சிறைமாற்றம்!
Thinappuyal -
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்த மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு தெமட்டகொட சமிந்த அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும், தெமட்டகொட சமிந்தவிற்கு எதிரான வழக்குகள் பல உயர்நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், குறித்த வழக்குகளுக்கு சமிந்தவை ஆஜர்படுத்த வேண்டியிருப்பதாலும் போகம்பறை சிறைச்சாலையில் இருந்து சமிந்தவை அழைத்து வருவதில்...
மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்திலுள்ள சிப்பிமடு காட்டுப்பகுதியில் மக்களின் உயிரைப் பறித்த காட்டுயானை – ஐந்து நாட்களின் பின் சிக்கியது.
Thinappuyal -
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலுள்ள சிப்பிமடு காட்டுப்பகுதியில், கடந்த காலங்களில் அப்பிரதேச மக்கள் சிலரின் உயிரை பறித்ததுடன் அவர்களது வீடுகளையும் பயிர்களையும் நாசமாக்கி வந்த 30 வயது மதிக்கத்தக்க காட்டுயானை பிடிப்பட்டுள்ளது.
இந்த யானை நேற்று மாலை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் மயக்க ஊசி மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் போன்றோரின் ஆலோசனைக்கமைய கடந்த ஐந்து...
யாழ்ப்பாணத்தில் என்ன வளங்கள் இல்லை என இளைஞர், யுவதிகளான நீங்கள் நினைக்கின்றீர்கள்.பகிரங்க சவால்!
Thinappuyal -
யாழ்ப்பாணத்தில் என்ன வளங்கள் இல்லை என இளைஞர், யுவதிகளான நீங்கள் நினைக்கின்றீர்கள். அவ்வாறான வளம் நிறையிருக்கின்றது. அதற்கான தேடல்கள் உங்களிடம் அதிகரிக்கப்பட வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களின் பின்னர் நாங்கள் ஒரு கட்டமைப்பிலிருந்து வேறொரு கட்டமான சமூதாயமாக முன்னேறிக் கொண்டு வருகின்ற இத்தருணத்தில் எதிர்கால இளைஞர், யுவதிகள் தேடலுக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும். அப்போது தான் தொழிலின் வளங்கள் மேம்படும் எனவும்...
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆகும். ஆனால் இதை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதை கூறினார்.
மேலும், நாட்டில் தற்போது 1164 வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்போது உள்ள அனுபவமிக்க வைத்தியர்களின் ஓய்வூதிய வயதை மூன்று வருடங்கள் அதிகரிப்பதால் வைத்தியர்களுக்கு நிலவும் வெற்றிடங்களை கட்டுப்படுத்த...
பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளே அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,, ஆண் பிள்ளைகளே அதிகம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என பெண்கள் மற்றும் சிறுவர் , பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெண் பிள்ளைகளுக்கு அதிகமாக பாதுகாப்பை வழங்கும் நடைமுறையானது சமூகத்தில் வழக்கமாகியுள்ளதால் சமூகத்தில் பெண்...
சட்டவிரோத மதுசார உற்பத்தி, மண் அகழ்வுகள், மரம் வெட்டுதல் போன்ற வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை விண்ணப்பங்களை வழங்க கருணை காட்டாது என கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் மதுசார உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று பேர் கடந்த வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, தலா ஒரு இலட்சம் ரூபா காசுப்பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய...
வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை!
Thinappuyal -
வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளதால் தாம் பெரும் அச்சத்தில் வாழ்வதாகவும், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பதால் தானும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என கலையழகனின் மனைவி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினா் அழைப்பாணை விடுத்துள்ளனா்.
இந்நிலையில்...
காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.
தற்போது, இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் தமிழக இளைஞர் ஒருவர் கன்னட அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இந்நிலையில் பதிலுக்கு இராமேஸ்வரத்தில் கன்னட பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார்.
இதன் உச்சகட்டமாக பெங்களூருவில்...