திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு திருகோணமலை கன்னியா என்னும் இடத்தில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. நிறைந்த பயணிகளுடன் பயணித்த பஸ், வீதியில் உள்ள வளைவுப் பகுதி ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது விபத்தில் 7 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்து தொடர்பில் மேலதிக...
இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சித்தாராமன் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை, இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார உடன்படிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவததற்காகவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தகவலை பதில் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதத்தில் அவர் இலங்கைக்கு வரவிருந்தபோதும் பின்னர் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் எட்கா உடன்படிக்கை தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை - உப்புவெளி, மஹிந்தபுரம் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களை காணவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது. 11 வயதான சிறுவனையும் அவருடைய தங்கையான 09 வயதான சிறுமியுமே காணாமல் போயுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு செல்வதாக கூறிச்சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும், இதனையடுத்து பெற்றோர் உப்புவெளி பொலிஸில் முறையிட்டுள்ளனர். இந்த நிலையில் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவர்கள் காணாமல் போனது தொடர்பில் ஐந்து பொலிஸ்...
சகோதரன் ஒருவரால் சகோதரி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று வெலிகமையில் இடம்பெற்றுள்ளது. 23 வயதான யுவதியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர் குற்றத்தை புரிந்த சகோதரன் 31 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி தாயொருவர் எனவும் அவர் தனது குழந்தையுடன் இருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். குற்றத்தை புரிந்தவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
தன்னுடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டுஎதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுஎதிர்கட்சி உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, ரஞ்சித்த சொய்சா , மஹிந்தாநந்த அளுத்கமகே , குமார வெல்கம மற்றும் கெஹலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன, பியல் நிசாந்த, ஜானக வாக்கும்பர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்களுடன் பிரத்தியேகமாக தொலைபேசியில் உரையாடி தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறும் ஜனாதிபதி அழைப்பு...
திகன பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகன் 5 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார். 22 வயதான தனது மகன், 25 வயதான நபர் ஒருவருடன் தங்கியிருந்த நிலையிலேயே காணாமல் போயிருப்பதாக குறித்த தாய் குறிப்பிட்டுள்ளார். இருவரும் மிக நெருக்கமாக இருந்தவர்கள் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி குறித்த இருவரும் வரகாபொல நகருக்கு சென்றதாகவும் அதன் பின்னர் தனது மகன் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனினும் இந்த...
வடக்கில் இருந்து படையினரை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். காவிந்த ஜெயவர்த்தன, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியின் தலைவராகவும் செயற்படுகிறார். இந்த நிலையில், தேசிய அரசாங்கம், முழுமையாக கடந்தகால காயங்களை ஆற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில்...
பொறுப்புக்கூறல் பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகள், வழக் கறிஞர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டுமுன்னெடுக்கப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது என்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது. உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத் திற்குட்பட்ட சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையைக்கண்டறியும் நிறுவனத்தை உருவாக்குங்கள். இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்கு...
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சக ஆயுள் தண்டனைக் கைதி ராஜேஷ்இரும்புக் கம்பியால் தாக்கியதில் பேரறிவாளன் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக...
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய பின்னர். அவரின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது அங்கு தமிழ் மக்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டம் செய்வர் என தாம் ஏங்கிக் கொண்டதாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியிருந்தார். ஜனாதிபதி மைத்திரியின் இந்தக் கருத்து, பான் கீ...