கர்நாடகாவில் எரிக்கப்பட்ட ஒரு பேருந்தின் விலை 50 லட்சம் எனவும் ,50 பேருந்துகள் எரிக்கப்பட்டு இருப்பதாக கே பி என் தகவல்
Thinappuyal News -0
கர்நாடகாவில் எரிக்கப்பட்ட ஒரு பேருந்தின் விலை 50 லட்சம் எனவும் ,50 பேருந்துகள் எரிக்கப்பட்டு இருப்பதாக கே பி என் தகவல் .ஊழியர்களை பத்திரமாக அழைத்துவர ஏற்ப்பாடு செய்யபடுவதாகவும் தகவல் .திட்டமிடப்பட்டு ஒரு பெரும் கும்பலே இந்த வன்முறையில் ஈடுபட்டு இருப்பதாகவும் கருத்து
KPN_ட்ராவல்ஸ்
38 - சொகுசு பேருந்துகள்
27 - பார்சல் சர்வீஸ் வாகனங்கள் - கன்னடர்களால் கொளுத்தப்பட்டது..
மதிப்பு 70 கோடிகளுக்கு மேலாக இருக்கும் என தகவல்.
பிரான்ஸில் தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை பிரயோகம்.
Thinappuyal News -
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிறுவர்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சுமார் 40பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் சிலர் மயக்கம் அடைந்தனர் என்றும் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பேசிக்கொண்டிருந்த போதே அங்கு வந்திருந்த...
சிம்பு சில தினங்களுக்கு முன் என் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டேன் என்று கூறியதாக ஒரு செய்தி வந்தது. பின் அவரே தான் அப்படி ஏதும் கூறவில்லை என்று டுவிட் செய்திருந்தார்.
ஆனால், இந்த தகவல் பலரும் சென்றடையவில்லை, இதற்காக இன்று ஓர் அறிக்கையை சிம்பு வெளியிட்டுள்ளார். இதில் மிக தெளிவாக தன் கருத்தை தெரிவித்துள்ளார். இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் காவேரி பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் கலவரம் நடந்து வருகிறது.
கர்நாடாகாவில் பல இடங்களில் ஒட்டியிருந்த கபாலி போஸ்டர்களை கிழித்துள்ளனர், அதை தொடர்ந்து தமிழக பதிவு வண்டிகளையும் எரித்துள்ளனர்.
சென்னையிலும் ரஜினி, ரமேஷ் அரவிந்த், பிரபு தேவா வீட்டிற்கு போலிஸாரால் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சமூக பிரச்சனைகளை பற்றி பேசும் படமாம்.
இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம் பாணியில் இப்படம் இருக்குமாம், இதுமட்டுமின்றி இதில் ஒரு சண்டைக்காட்சியில் விஜய் சட்டையில்லாமல் சண்டையிடுவாராம்.
வேலாயுதம் படத்திலும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி இப்படி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 15 வயது சிறுவன் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகரான பாரீஸில் மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 15 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை அவன் பொலிசாரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதில்,...
ஜேர்மனி நாட்டில் கப்பலின் கூரை பாலம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.
தெற்கு ஜேர்மனியில் உள்ள Erlangen என்ற நகரில் இருந்து Viking Freya என்ற பயணிகள் கப்பல் ஹங்கேரியின் தலைநகரான Budapest நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது.
கப்பலில் 49 ஊழியர்கள் மற்றும் 181 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், Main-Danube என்ற ஆற்றில் பயணம் செய்த அந்த கப்பல் ஆற்றின் மத்தியில்...
சுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் இருந்த நபரை தாக்கி கொள்ளையிட்ட இரண்டு மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Kleinbasel என்ற நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பிற்கு 55 வயதான நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.
பின்னர், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
ராணுவ குடியிருப்பிற்கு வெளியே உள்ள இருக்கையில் சில...
வட கொரியா நாட்டில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாகவும், 395 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேற்கு வட கொரியாவில் கடும் மழை பெய்ததை தொடர்ந்து அங்குள்ள Tumen ஆறு நிரம்பி அப்பகுதி குடியிருப்புகளில் புகுந்துள்ளது.
இதில், சாலைகள், இருப்பு பாதைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன.
இதுமட்டுமில்லாமல், சுமார் 35,500 வீடுகள் சேதமடைந்ததால் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் 133...
யூதர் ஒருவர் 6 வயது பாலஸ்தீன சிறுமியை மிக கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெத்லகேம் நகரம் அருகே அமைந்துள்ள அல்-காதர் கிராமம், அருகே 6 வயது பாலஸ்தீனிய சிறுமியை யூதர் ஒருவர் கார் ஏற்றிக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட சிறுமி Lama Musa என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், சிறுமியை மோதியவுடன் ஓட்டுநர் அங்கிருந்த தப்பி...