வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனம் வருடாந்தம் நடாத்தி வரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 01.30 மணி வரை யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்திய சாயி சேவா நிலைய மண்டபத்தில் வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் கே.வி.சிவனேசன் தலைமையில் இடம்பெற்றது. "தெய்வம் கொடுத்ததைத் தெய்வத்துக்கே கொடுத்து உயிரைக் காப்பாற்றி ஆரோக்கியத்தை வளர்ப்போம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த...
  கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 10 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உடலமாக மீட்கப்பட்ட 27 வயதுடைய மாணவன் நோய் நிலைமை காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த நிலையில் குறித்த மாணவன் ஏதேனும் மருந்து வகையொன்றை உட்கொண்டதன் மூலம் மரணித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார்...
  எதிர்கால தேர்தல்களில் தமது பதவிகளை முன்னிறுத்தாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்ஒத்துழைப்பார் என்று எதிர்ப்பார்ப்பதாக கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கதெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். கட்சியை புதிய திசையில் கொண்டு செல்வதற்காகவே, புதிய அமைப்பாளர்கள்நியமிக்கப்பட்டதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கட்சியின் குருநாகல் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் மஹிந்த தரப்பினர்அதனை நிராகரித்தனர். இதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை விடஅவர்களே தற்போது மக்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன்...
  நானு ஓயா பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ரம்பாதெனிய பகுதியில் காணமல் போய் தேடப்பட்டு வந்தவரின் உடல் எச்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா - ஹற்றன் பிரதான வீதியில் நானுஓயா பங்களா அத்தப்பகுதியில் நேற்று மாலை மீட்கப்பட்ட எலும்புக் கூட்டு எச்சங்கள் கினிகத்தேன ரம்பாதெனிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஜேதுங்க என அவரது மனைவி இன்று அடையாளம் காட்டியுள்ளார். காணாமல் போன என் கணவர் எலும்புக்...
  கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாத்தறையில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய அவர் இன்று முதல் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எல்.ஏ.ஜயசிங்க கண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   இதேவேளை கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையேற்றுள்ள சுமித் எதிரிசிங்கவுக்கு இன்று திங்கட்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.     மட்டக்களப்பு...
  அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபா பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். மொனராகலை கொடியான பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கி வருகிறது என வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை அனுராதபுரம் ராஜாங்கன...
  சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஹசீஸ் என்ற போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை பதுளை, எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் ஒன்றின் உதவியுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனையின் பேரில் எல்ல நகரில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோப்ப நாய் சந்தேக நபர் மீது பாய்ந்து மோப்பம்...
  சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வரும் நிதிகள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் புதிய நிர்வாக கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திராய்மடுவில் இன்று நடைபெற்றது . இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு...
  காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மெக்ஸ்வெல் பரணகமவின் ஆணைக்குழு, தமது இறுதி அறிக்கையில், உண்மையான உள்ளூர் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை. எனினும், பொறிமுறைக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவிகளும், கண்காணிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிக்கை கடந்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு ஒன்று...
  தென்பகுதியில் வலஸ்முல்ல தேசிய பாடசாலையில் அதிபரின் தாக்குதலை அடுத்து மாணவி ஒருவர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலால் குறித்த மாணவியின் கைகளிலும் முதுகுப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாணவி தமது பிறந்த நாளை முன்னிட்டு கொண்டு வந்த சொக்கலேட்டுக்களை ஏனைய மாணவர்களுடன்பகிர்ந்த போது அவற்றின் உறைகள் வகுப்பில் வீசியெறியப்பட்டிருந்தன. இதன்போது பாடசாலையின் அதிபர் மாணவியின் கைகளை நீட்டுமாறு கோரி, பிரம்பால்அடித்துள்ளார். இதனையடுத்து குறித்த மாணவி வீசிக் கிடந்த சொக்கலேட் உறைகளை பொறுக்கிகுப்பைக்கூடைக்குள் எறிய முனைந்த போது, அவரின்...