பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் குடும்ப நண்பியான லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் திலக்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, அரசியல் ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல், நேர்மையான சேவையை செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகலில்...
உலகின் நம்பர் வன் வீராங்கனை செரினா வில்லியம்சை பின்னுக்கு தள்ளி ஏஞ்செலிக் கெர்பர் முதலிடத்தை பிடிக்க உள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜேர்மனியை சேர்ந்த Angelique Kerber ம், செக்குடியரசின் Karolina Pliskova வும் மோதினர்.
இதன் ஆரம்பத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய Angelique Kerber 6-3, 4-6, 6-4 என்ற செட்கணக்கில் Karolina Pliskova ஐ வீழ்த்தி. இந்த...
அமெரிக்க ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் ‛நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச் உடன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா மோதினார்.
நடப்பு சாம்பியன் ஜோகோவிச் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும், கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில்...
எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை பூண்டோடு அழித்துவிடுவோம் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வட கொரியா தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2006ம் ஆண்டு ‘இனி எவ்வித அணுகுண்டு பரிசோதனைகளை நடத்தக்கூடாது’ என ஐ.நா சபை தடை விதித்தது.
இதுமட்டுமில்லாமல், வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து ஐ.நா உத்தரவிட்டது.
எனினும்,...
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் வெற்றியை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த பெண் செவிலியர் பெண் மரணமடைந்தார்.
போலந்து நாட்டை கைப்பற்றுவதற்காக ஜேர்மனி இரண்டாம் உலகப்போரில் குதித்தது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் ஜேர்மனியின் இரண்டாம் உலகப்போரை எதிர்த்தனர். ஜேர்மனிக்கு ஆதரவாக இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இருந்தன.
சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த போரில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஜப்பான் அமெரிக்காவிடம்...
பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்த தங்கமகன் தங்கவேலுவுக்கு இருக்கும் ஒரே கனவு என்பது தமது தாயார் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதே.
தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பேருந்து விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அப்போது தங்கவேலுவின் மருத்துவ செலவிற்காக அவரது அம்மா சரோஜா மூன்று லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
வீடு வீடாக சென்று காய்கறி விற்கும் சரோஜாவால் மூன்று லட்சத்தை திருப்பிச் செலுத்தவே முடியவில்லை.
இது நாள்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஹிலாரி கிளிண்டன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயோர்க் நகரின் உலக வர்த்தக...
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 15 வயது சிறுவன் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகரான பாரீஸில் மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 15 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை அவன் பொலிசாரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதில்,...
கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 10 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உடலமாக மீட்கப்பட்ட 27 வயதுடைய மாணவன் நோய் நிலைமை காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மாணவன் ஏதேனும் மருந்து வகையொன்றை உட்கொண்டதன் மூலம் மரணித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார்...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்கானிப்பு உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றவாளிகள், போதைப்பொருள் அடிமைகள் மற்றும் பணத்திற்கு கூச்சலிடுபவர்களினால் நாளை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.
கொலன்னாவை நகரசபையின் முன்னாள் துணை மேயர் சுரேஷ் கோதாகொடவின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது என்பது சுரேஷ் கோதாகொடவுக்கும்...