அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால் ஒரு தமிழ்ப் பெண் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளார்.
அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தேசத்தின் இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மாயா ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வெள்ளை மாளிகையில் 8.9.2016 வியாழக்கிழமை கவிதை வாசித்தனர்.
மாயா...
மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் இந்த நிலையில் அவை அனைத்தும் புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கூறியுள்ளார்.
இவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு மாவீரர் துயிலம் இல்லங்களிலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்து விட்டு சென்றோம் எனவே பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
முல்லைத்தீவில் வன்னிவிளான்குளம் மாவீரர் துயிலும்...
அநுராதபுரம்-தந்திரிமலை பிரதேச கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து புராதன கல்வெட்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கல்வெட்டு தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த கல்வெட்டு தொடர்பில் மேலதிக பரிசோதனைகளுக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இருவர் ஆய்வில் ஈடுபட்டு வருவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.எம்.பீ.ஜே.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது தேவைகளுக்காக வீட்டினுள்ளே ஒரு பகுதியை தோண்டும் போது குறித்த கல்வெட்டு காணப்பட்டதாகவும், உடனடியாக இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவித்ததாகவும்...
மாளிகாவத்தை பிரதேசத்தின் புகையிரத குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேரந்த 22 வயதான சந்தேகநபரிடம் இருந்து 1.10 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த கால மோசடியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை சமகால அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
அதற்கமைய போலி ஆவணம் தயாரிக்க குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக, சட்டமா அதிபர் கடந்த 9 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இதுவரை காலமும் கிடப்பில் போட்டிருந்த வழக்கு தொடர்பில் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக...
உசேன் போல்ட் – மின்னல் மனிதன். மொத்த உலகையும் 10 விநாடிகள் தன்னை மட்டுமே பார்க்க வைத்த ஒரு தடகள் சகாப்தம். தொடர்ந்து 3 ஒலிம்பிக் தொடர்களில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தவர். அவர் ஓடிய அதே களத்தில் இன்னுமொரு உசேன் போல்டை உலகம் கண்டுகளித்துள்ளது. ஆனால் போல்டைப் போல இரண்டு கால்களால் பறந்தவரல்ல இவர். உடலளவில் குறைகள் கொண்டிருந்தாலும் சோதனைகள் வென்று சாதனை படைத்த நாயகர்கள் பங்கேற்ற...
யாழ் உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் சாம் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ், அடுத்த ஐ.நா பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்விலும் முன்னிலை பெற்றுள்ளார்.
ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனின் பதவி இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது.
அடுத்த ஐ.நா பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க ஐ.நா., வரலாற்றில் முதன் முறையாக விவாதம், நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
போர்த்துக்கல் முன்னாள் பிரதமரும், ஐ.நா அகதிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அன்டோனியோ...
முல்லைத்தீவு பெரிய பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள் பெண்களுக்கான தொழுகை 6 மணிக்கும் ஆண்களுக்கான தொழுகை 7 மணிக்கும் இடம் பெற்றுள்ளது. இத் தொழுகையினை மௌலவி பரீத் முகம்மது முபாரிஸ் நடாத்தி வைத்துள்ளார்.
இதற்கு பெருந்திரளான முஸ்லீம் மக்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோபிகா, புளியங்குளம்.
கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துமிந்த சில்வாவை போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை பின்னர் அதிகாரிகள் மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துமிந்த சில்வா மற்றும் தெமட்டகொட சமிந்த ஆகிய இருவரையும் போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்புவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.
இருந்து போதிலும் சில காரணங்களுக்கமைய துமிந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்து செய்துள்ளனர்.
எப்படியிருப்பினும்...