ஹஜ் பெருநாளை முன்னிட்டு 12.09.2016 திங்கட்கிழமை  நாடளாவிய ரீதியில்  பள்ளிவாசல்களில் விசேட தொழுகைகள் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில் மலையகத்திலுள்ள முஸ்லீம் மக்களும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட தொழுகையில் ஈடுபட்டதுடன் மகிழ்ச்சியோடு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் மௌலவி முகமட் சாஜகான் தலைமையில் விசேட தொழுகை இடம்பெற்றது. இவ் வழிபாபாட்டில் அட்டன் பிரதேச முஸ்லீம் மக்கள் அதிகமானோர் கலந்துகொண்டனர். நோட்டன் -பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் நாட்டின் இறைமையிலும் மக்களின் சுதந்திரத்திலும் கைவைப்பதற்கு இடமளிக்கப்படாது என்பதே இன்று ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஒரே கோசமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அக்கோசத்தின் அடிப்படையில் ஒரே மேடையில் இருந்துகொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முடியும் என்றும் குறிப்பிட்டார்.  (10) பொரல்லை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம...
  யாழ்.உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பாக சட்டத்திற்கமைய சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சிலோன் மிஷன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அன்னப்பா ஜெயக்குமார் கூறியுள்ளார். உடுவில் மகளிர் கல்லூரியில் முன்னர் கடமையாற்றிய அதிபரை கல்லூரியின் ஆளுநர் சபையானது திட்டமிட்டே அவரை பதவியில் இருந்து ஒய்வு படுத்தி, புதிய அதிபரை நியமித்துள்ளதாக குற்றம்சாட்டியும் முன்னைய அதிபரையே மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கல்லூரியின்...
  மீண்டும் இலங்கையில் பாதாள உலகத்தினர் தலைதூக்கியுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அதில் மிகவும் பிரபலமான 6 பேரின் தலைமைத்துவத்திலான பாதாள குழுவானது கொழும்பில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் தெமட்டகொட சமிந்த, புளுமென்டல் சஞ்சு, ஆமி சம்பத், துனகஹ சுஜி, சமயங் மற்றும் அங்கொட லொக்கா ஆகியோர் பாதாள உலகத்தலைவர்கள் என்றும் இவர்களின் தலைமையின் கீழ் 6 குழுக்கள் கொழும்பில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மொரட்டுவ அங்குலான பிரதேசத்தில் புதிதாக இரண்டு...
  இலங்கையில் ஆட்சி செய்து வரும் சிங்கள அரசுகளும் அந்த அரசுகளை வழிநடத்தி வரும் பௌத்த மகாசங்கங்களும் தமிழர்கள் மீது மேற்கொண்டு வந்த ஒடுக்குமுறைகளும் பாரபட்டங்களினால் தமிழர் சமூகம் கடந்த 60வருட காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் சமூகம் அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் போராட்டங்களை நடத்தினர். வடக்கு கிழக்கில் தங்களின் பூர்வீக நிலங்களை காப்பாற்றி தக்க வைத்து கொள்வதற்காக போராடி வந்தனர். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக...
  நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரும், சமகால நல்லாட்சி அரசாங்க அமைச்சர் ஒருவரிடம் நெருக்கமான உறவை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் தேர்தலில் புதிய கட்சி ஒன்றில் போட்டியிட ஆயத்தமாகி வரும் நிலையில், குறித்த இருவரும் நல்லாட்சி அரசாங்க அமைச்சரை நாடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வீரவன்ச மற்றும் கம்மன்பிலவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே குறித்த அமைச்சருடன்...
  ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, இடம்பெற்ற சில நிகழ்வுகள், தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் ஆற்றலை இழந்து விட்டனரா என்ற சந்தேகத்தைத் தான் ஏற்படுத்தியிருக்கிறது. ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளும், வடக்கு மாகாண முதலமைச்சரும் தனித்தனியாக சந்தித்தமை, ஐ.நா பொதுச்செயலரின் கவனத்தை ஈர்க்க காணாமற்போனோர், இடம்பெயர்ந்தோர் நடத்திய வெவ்வேறான போராட்டங்கள் என்பனவே இந்தச்...
  விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளார்கள்” இந்த வார்த்தைகளேதற்போது அதிக அளவாக பேசப்பட்டு வருகின்றது. மஹிந்த மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகள் தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு மத்தியில், புலிகளை முழுதாக நான் அழிக்கவில்லை என்று மஹிந்த தற்போது கூறிவரும் அதே சமயம் விடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு காரணிகளாக கடந்தகால ஆட்சியாளர்கள் அனைவருக்கும் விகிதாசார அடிப்படையில் வெற்றிகளும் பிரித்து கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையிலே விடுதலைப்புலிகள் முற்று...
  யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரம் தற்போது பெற்றோர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. இழுபறி நிலையிலுள்ள குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக மகளிர் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை ஒன்றிணைத்து புதிய நிர்வாக குழுவொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது கடுமையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும், அதற்கு பின்னரான சூழ்நிலை தொடர்பிலும் ஆராய்வதற்கான முக்கிய கலந்துரையாடல் இன்று (11) இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் மாலை 04 மணியளவில் சுன்னாகம் காங்கேசன்துறை...
  1038 ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 103 பேரே தமிழ் மொழி மூலம் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இத மனவருத்தத்திற்குறிய விடயம் ஒன்றாகும். இதனை அதிகரிப்பதற்கு; விசேட வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஏற்படுத்துமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் தொழில்நுட்ப பாடவிதானத்தின் கீழ் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரர்களுக்கான ஆசிரியர் நியமனம் 1038 பேருக்கு மஹாரகமவில் அமைந்துள்ள கல்வியல் கல்லூரி கேட்போர் கூட மண்டபத்தில் கல்வி...