வடபகுதியை நான் எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன். இங்கு இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க தமிழில் முறைப்பாடு செய்யக் கூடிய விசேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் தமிழ் மொழி மூலம் தொலைபேசியில் முறைப்பாடு செய்யும் திட்டத்தை வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடபகுதியை நான் எனது இரண்டாவது ஊராக...
  மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டத்தில் நடந்த ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டதே சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெறுமதியற்ற27 ரக மிக் விமானங்கள் நான்கை கொள்வனவு செய்ய போலி நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பெருந்தொகை பணம் தரகு பணமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. லசந்த விக்ரமதுங்க தனது சன்டே...
  மாத்தளைப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றுமொரு தொகுதி துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாத்தளை கச்சேரிக்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு நேற்று முன்தினம் பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட அத்திவாரம் தோண்டும் பணிகளின் போது பெருமளவிலான துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. அந்த இடத்துக்கு அருகிலுள்ள மற்றொரு பகுதியிலிருந்தே இன்றும் துப்பாக்கிகள் மீண்டும் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் பல வருடங்கள் பழைமை வாய்ந்த, துருப்பிடித்த நிலையில் காணப்படுவது போன்றே இன்று கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களும் அதே காலப் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம்...
  இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் மெதுவான நடைமுறைகளையே காணமுடிவதாக சர்வதேசமன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது அமர்வு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளநிலையில் சர்வதேச மன்னிப்பு சபை எழுத்துமூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது. அதில் இலங்கை அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும்வெளிப்படைத்தன்மையில்லாமை என்பன தொடர்பில் மனித உரிமை காப்பாளர்கள்அதிருப்தி கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 2009ம் ஆண்டு போரின் போதும் அதற்கு பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்பெரும்பாலானவை தொடர்பில்...
  வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என யாழ் கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை.இராணுவ முகாம்களை அகற்றுமாறு எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெற்கைச் சேர்ந்த சிலர் கூறுகின்ற போதிலும் அவர்கள் எவரும் போர்க்களத்திற்கு சென்றவர்கள் கிடையாது. போர் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியுடன்...
  திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஒருவர்தடுத்து வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட்ட ஐந்துபேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். பண்டாகிரிய என்ற இடத்தில் நெல் திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர்; இரண்டு பேருடன் 20வயதான இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார். எனினும் செப்டம்பர் 5ம் திகதி முதல் அவரைக்காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் காணாமல் போனதாக கூறப்படும் சந்தேகநபர், தடுப்பில் இருந்துதப்பிச்சென்று விட்டதாக...
  மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றக் கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் பெரியமாதவணை, மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் அண்மைக் காலமாக சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம்...
  மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதியகாத்தான்குடி , பைஷல் வீதியைச் சேர்ந்த முஹம்மது பாறூக் ஹயாஸ் அப்கர் (வயது 19) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இவர் காத்தான்குடியில் பாதணிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் தனது இரவு நேரக் கடமையை முடித்து விட்டு வெளியேறி மட்டக்களப்பை...
  தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைத்துள்ளது. எனினும், ஆட்சி மாறாமல் இருந்திருந்தால், தன்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பில் நேற்று (08) வழங்கப்பட்ட தீர்ப்பு, அறிவிக்காமலே விடப்பட்டிருக்கலாம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.   வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதிமன்றத்துக்கு வெளியில் வந்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘மற்றுமொருவர் பாதிக்கும் போது, அதனை பார்த்து சந்தோஷப்படுமளவுக்கு நான் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லர்’ என்றும்...
  தேடப்படும் குற்றவாளி ஒருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த நபர் பொரளை மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நபர்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி அட்டைகளைப் பெற்று, தன்னியக்க இயந்திரத்தில் பணம் பெற்றுள்ளார். இந்த சந்தேக நபர், பணத்தை மீளப் பெறுவது தொடர்பிலான காட்சிகள், தன்னியக்க இயந்திரம் பொறுத்தப்பட்டிருக்கும் சி.சி.டீ.வி கமெராக்களில் பதிவாகியுள்ளன. மேலும், சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிவோர், கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுகொண்டுள்ளது.