கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று பி.ப 4.00 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் வாகன சாரதியின் அசமந்த போக்கினால் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற பெண்கள் இருவர்,...
கம்பஹா வெலிவேறிய பிரதேசத்தில் 11 இளைஞர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வசம் காணப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 3 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வெலிவேரிய மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 09 பேர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட...
கட்டுநாயக்க மற்றும் குரண புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரத வீதி பழுது பார்க்கும் வேலைத் திட்டத்தின் காரணமாக புத்தளம் புகையிரத போக்குவரத்து நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 4 மணிக்கு, கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் வரை மற்றும் காலை 3.50 மணிக்கு சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நுர்நகர் தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் புகையிரதம் பயணிக்காது...
இலங்கையில் புகைத்தல் பாவனையானது மிகவும் குறைவடைந்துள்ளதாக தேசிய மனிதவள மேம்பாட்டு குழுவின் தலைவரும், இலங்கை புகையிலை நிறுவனத்தின் பணிப்பாளரும்தினேஸ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
புகைத்தல் பாவனையை நிறுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பிரதிபலனே இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய சுகாதாரத்தை கவனத்திற்கொண்டு புகையிலை சார்ந்த பொருட்களுக்கு வற்வரியினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் இலங்கை புகையிலை நிறுவனம் 85 பில்லியன் வரி இலாபமாகக் கிடைத்ததாகவும்,...
வடக்கு அதிவேக பாதையை தம்புள்ளை மற்றும் ஹபரணை ஊடாக திருகோணமலை வரை விஸ்தரிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக, உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மூன்று அதிவேக பாதைகளுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங் தன்னுடைய திருமணம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங், பாலிவுட் நடிகை ஹசல் கீச்சை காதலித்தார்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டவே, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 2015ம் ஆண்டு நடந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு விளையாட்டு போட்டிகளில் யுவராஜ் சிங் பிஸியானார்.
தொடர்ந்து இருவரும் தங்களது திருமணம் பற்றி வாய்திறக்காமல் இருந்த நிலையில்,...
அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் விமானங்களில் சம்சங் கேலக்சி நோட் 7 போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்சங் கேலக்சி நோட் 7 மொபைல் போன்களின் பேட்டரி தீப்பிடித்து எரிவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன. இதனால் ஏராளமான மொபைல் போன்களை சீனா திரும்ப பெற்றது.
இந்த விவகாரத்தால் 2 தினங்களுக்கு முன்பு இந்த வகை சம்சங் போன்களை விமானங்களில் பயன்படுத்த அவுஸ்திரேலியா தடை விதித்தது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும்...
உலக வல்லரசு நாடுகளின் ஒன்றான பிரித்தானியா பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் இன்றளவும் பின்பற்றி வரும் 10 மோசமான பழக்கவழக்கங்கள் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த Ipsos MORI என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் அந்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் குடிமக்கள் இன்றளவும் 10 மோசமான பழக்கவழக்கங்களை பின்பற்றி வருவதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானிய குடிமக்கள் மது அருந்துவதில்...
சுவிட்சர்லாந்து நாட்டில் அண்மையில் திறக்கப்பட்ட சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் மூலம் அந்நாட்டு சுற்றுலா துறைக்கு கோடிக்கணக்கில் வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக ரசிகர்களை தனது நகைச்சுவையால் கட்டிப் போட்ட சார்லி சாப்ளின் தனது கடைசி 25 ஆண்டுகளை மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சுவிஸ் நாட்டில் தான் வசித்தார்.
ஜெனிவா ஏரிக்கு அருகில் சாப்ளின் வசித்து வந்த ஆடம்பரமான வீடு கடந்த ஏப்ரல் மாதம் Chaplin’s World என்ற பெயரில் அருங்காட்சியகமாக...
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த வீரமங்கை ஆசியா ரம்ஜான் அந்தர் வீரமரணத்தைச் சந்தித்துள்ளார்.
குர்திஸ்தானின் ஏஞ்செலினா ஜூலி என்று அழைக்கப்பட்டவர் ஆசியா ரம்ஜான் அந்தர். ஏஞ்செலினா ஜூலி மாதிரியான தோற்றப் பொலிவு உடைய ஆசியா மிகவும் துணிச்சலான வீர மங்கை.
கடந்த 2012ம் ஆண்டு குர்திஸ்தான் ராணுவப் படையில் உருவாக்கப்பட்ட மகளிர் அணியில் இணைந்த ஆசியா, அன்று முதல் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆக்ரோஷமாக செயல்பட்டு வந்தார்.
இவர் 18 வயதிலே...